அதிகாரமளிப்பு விழாவின் பாரம்பரிய பதவியேற்று விருந்தில்
பாதுகாப்பு செயலாளர் கலந்துக் கொண்டார்

ஒக்டோபர் 19, 2025

திருகோணமலை சீனக்குடா விமானப்படை கலாசாலையில் நேற்று மாலை (அக்டோபர் 18) நடைபெற்ற விமானப்படையின் புதிதாக பதவியேற்று அதிகாரிகளுக்கான பாரம்பரிய பதவியேற்பு விருந்தில், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார் .

தேசிய சேவைக்கு புதிதாக இணையும் இளைய அதிகாரிகளை வரவேற்கும் முகமாக பாரம்பரிய இராணுவ சம்பிரதாய சடங்குகளுடன் இந்நிகழச்சி நடைபெற்றது. 

நிகழ்வுக்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அன்புடன் வரவேற்றார்.

பயிட்சியின் போது சிறந்த தலைமைத்துவம் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்திய அதிகாரிக்கு Sword of Honour விருது வளங்கப்பட்டமை இந்நிகழ்வின் ஒரு சிறப்பம்சமாகும்.

KDU வின் துணை வேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் புதிதாக அதிகாரம் பெற்ற அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.