பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் (CDRD) வெளிச்செல்லும் பணிப்பாளர் நாயகம் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்
நவம்பர் 04, 2025பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் (CDRD) வெளிச்செல்லும் பணிப்பாளர் நாயகம் கமாண்டர் ஜனக குணசீல நேற்று (அக்டோபர் 3) பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது இருவரும் சுமுகமான கலந்துரையாடலின் ஈடுபட்டதுடன் பாதுகாப்புச் செயலாளர் கமாண்டர் குணசீலவுக்கு அவருடைய எதிர்கால முயற்சிகளுக்காக தனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.