யுத்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தேவைகள் தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கவனம் செலுத்தினார்

நவம்பர் 04, 2025

ஓய்வுபெற்ற, காயமடைந்த மற்றும் மறைந்த போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலன்புரி தொடர்பான பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட பொது தின திட்டத்தின் கீழ், நவம்பர் 3 ஆம் திகதி கொழும்பிலும், வார இறுதியில் கேகாலையிலும் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகள், யுத்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கான அமைச்சின் தொடர்ச்சியான திட்டங்களில் ஒன்றாகும். இந்நிகழ்ச்சிகளின் போது, பிரதி அமைச்சர் நேரடியாக பங்கேற்பாளர்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன், நிர்வாக மற்றும் நலன்புரி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

யுத்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நல்வாழ்வு மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதில் பாதுகாப்பு அமைச்சின் நீடித்த அர்ப்பணிப்பை இந்த பொது தின நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. தேசத்தைப் பாதுகாப்பதில் முப்படை உறுப்பினர்கள் செய்த தன்னலமற்ற சேவை மற்றும் தியாகங்களுக்கு அமைச்சின் ஆழ்ந்த நன்றியையும் இது பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.