கொழும்பில் நடைபெற்ற பிரித்தானிய நினைவு தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்துக் கொண்டார்
நவம்பர் 11, 2025கொழும்பு ஜாவத்தை மயானத்தில் உள்ள பொதுநலவாய போர்வீரர் கல்லறையில் இன்று (நவம்பர் 11) பிரித்தானிய நினைவு தினம் நினைவுகூரப்பட்டது. இரண்டு உலகப் போர்களின் போது உயிழந்த பொதுநலவாய நாடுகளின் வீரர்களின் துணிச்சலையும் உயர்ந்த தியாகத்தையும் இந்த நிகழ்வு நினைவு கூர்ந்து நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அதைத் தொடர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு Andrew Patrick உட்பட இந்திய மற்றும் கனேடிய உயர் ஸ்தானிகர்கள், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஜப்பான் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டனர்.