பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு கிராமப்புற பாடசாலைகளுக்கு நன்கொடைகள் மற்றும் நூலக புணரமைப்பு மூலம் ஒத்துழைப்பு
நவம்பர் 13, 2025பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU), இன்று (நவம்பர் 13) அனுராதபுரம் மாவட்டத்தில் இரண்டு கல்வி சார்ந்த திட்டங்களுடன் அதன் சமூக நல முயற்சிகளைத் தொடர்ந்தது.
கலேன்பிந்துனுவெவ, ரத்மல்வெட்டிய, ஆரம்ப பிரிவு பாடசாலையில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி டாக்டர் (திருமதி) ருவினி ரசிகா பெரேரா தலைமையில், பள்ளி உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் விநியோகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தகுதியான பல மாணவர்களுக்கு அத்தியாவசிய பள்ளிப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலதிக செயலாளர் (சிவில் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு) திருமதி இந்திகா விஜேகுணவர்தன, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கல்வித் துறை பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பின்னர், இலங்கை விமானப்படையின் (SLAF) ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் நூலக புணரமைத்தல் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக, சேவா வனிதா பிரிவின் தலைவர் டாக்டர் (திருமதி) ருவினி ரசிகா பெரேரா, மாதாபுவ, பலுகொல்லாகம வித்தியாலயத்திற்கு விஜயம் செய்தார்.
இந்த முயற்சிகள், கிராமப்புற சமூகங்களில் கல்வியை மேம்படுத்துவதற்கும் மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றன.