நெலுவவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உயர்தர மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்திற்கு படையினர் உதவினர்
நவம்பர் 22, 2025573 வது காலாட் படைப்பிரிவின் கீழ் உள்ள 20 வது இலங்கை இலகுரக காலாட்படை (20 SLLI) படையினர், இன்று (நவம்பர் 22) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெலுவவில், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் உதவுவதற்காக நடவடிக்கை ஏடுத்துள்ளனர்.
நிலவிவரும் மோசமான காலநிலை காரணமாக, நெலுவ நகரத்தின் நெலுவ-தெல்லவ பாதை 150 மீட்டர் தூரம் வரை சுமார் மூன்று அடி நீரில் மூழ்கியுள்ளதுடன் இதன் காரணமாக அதனூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதனால், குறிப்பாக பரீட்சை நிலையங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு உதவ ஒரு இராணுவ குழு (01 அதிகாரி மற்றும் 20 படைவீரர்கள்) உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. இராணுவ டிரக் வண்டிகள் மற்றும் டிராக்டர்களைப் பயன்படுத்தி, மாணவர்கள் மற்றும் பொதுமக்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை கடந்து அழைத்துச் செல்லும் பணியில் படையினர் தற்போது ஈடுபட்டுள்ளதுடன் தடையற்ற போக்குவரத்து மற்றும் பொது பாதுகாப்பை உறுதி செய்ய உதவி வருகின்றனர்.
பாதுகாப்பு அமைச்சு, இராணுவத் தலைமையகம் மற்றும் 573ம் காலாட் படைப்பிரிவின் கட்டளை தளபதி ஆகியோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.