இராணுவத்தின் 8 SR படையினர் கடுகண்ணாவை நிலச்சரிவு மீட்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர்

நவம்பர் 22, 2025

பஹல கடுகண்ணாவையில் இன்று (நவம்பர் 22) காலை ஏற்பட்ட பாரிய நிலச்சரிவைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் 8வது சிங்க படைப்பிரிவைச் (8 SR) சேர்ந்த வீரர்கள் உடனடி தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கையைத் ஆரம்பித்துள்ளனர். 

கணேதென்னை கிராம சேவையாளர் பிரிவில் (மாவனல்லை பொலிஸ் பிரிவு ) காலை 9 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலச்சரிவில் ஒரு வீடு மற்றும் ஒரு ஹோட்டல் முழுமையான சேதமடைந்துள்ளதுடன் காயமடைந்த இருவர் உடனடியாக மாவனல்லை வைத்தியசாலைக்கு படையினரின் உதவியுடன் எடுத்துச் செல்லபட்டுள்ளனர்.

 தற்போது, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக நம்பப்படும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகளை ஒரு இராணுவக் குழு (01 அதிகாரி மற்றும் 15 பிற வீரர்கள்) மேட்கொண்டு வருகிறது. அத்துடன் மீட்பு பணிகளுக்கு உதவ மேலும், ஒரு 8வது SR படைப்பிரிவின் 01 அதிகாரி மற்றும் 30 பிற வீரர்கள் அடங்கிய மற்றுமொரு குழுவும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.