வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அக்குரெஸ்ஸ - சியம்பலாகொட பாதையில் உயர்தர மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்க இலங்கை இராணுவ 3 (V) கெமுனு பிரிவின் படையினர் உதவி
நவம்பர் 22, 2025பனசுகம பகுதியில் உள்ள அக்குரெஸ்ஸ - சியபம்லாகொட பாதை வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவத்தின் 613 காலாட் படையணியின் கெமுனு வாட்ச் (3 தொண்டர்) படையினர் உடனடி நிவாரணப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
பனசுகம பகுதியில் உள்ள அக்குரெஸ்ஸ - சியம்பலாகொட பாதையில் சுமார் 200 மீட்டர் நீரில் மூழ்கியுள்ளதுடன் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, மக்களுக்கு உதவ 01 அதிகாரி மற்றும் 05 படைவீரர்கள் அடங்கிய இராணுவக் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதி வழியாக பொதுமக்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல படையினர் இராணுவ யூனிபஃபல் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.