இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்தை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பார்வையிட்டனர்
நவம்பர் 26, 2025கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்று (நவம்பர் 26) நடைபெற்ற இந்த நிகழ்வில் கௌரவ சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் Dr நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த கப்பலுக்கு வருகைதந்த சிறப்பு விருந்தினர்களை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா மற்றும் கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் அசோக் ராவ் ஆகியோர் வரவேற்றனர்.
வரவேற்பை தொடர்ந்து, மேற்படி கப்பலின் கட்டளை அதிகாரி கப்பல் தொடர்பில் அறிமுகத்தினை விருந்தினர்களுக்கு வழங்கினார். அத்துடன் அவர்களுக்கு கப்பலை சுற்றிக்காட்டி விளக்கமளித்தார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) நடைபெறவிருக்கும் இலங்கை கடற்படையின் சர்வதேச கடற்படை கப்பல் அணிவகுப்பில் பங்குபெற்ற இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியான இக்கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கௌரவ வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்ஹ, முப்படைத் தளபதிகள், இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.