வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.300 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள உலர் உணவுப் பொருட்களை பிரீமா நிறுவனம் நன்கொடையாக வழங்கியது

டிசம்பர் 01, 2025

நாடு முழுவதும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ரூ.300 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள பிரீமா உலர் உணவுப் பொருட்களை பிரீமா நிறுவனம் நேற்று மாலை (நவம்பர் 30) ​​நன்கொடையாக வழங்கியுள்ளது. 

இந் நன்கொடை அடையாள பூர்வமாக பாதுகாப்பு அமைச்சில் வைத்து பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடம்(ஓய்வு) பிரீமா நிறுவனத்தின், சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் பிரதம முகாமையாளர் திரு. சஜித் குணரத்ன மற்றும் சிலோன் கிரைன் எலெவேடர்ஸ் நிறுவனத்தின் பிரதம முகாமையாளர் திரு. சஞ்சீவ பெரேரா ஆகியோரினால் கையளிக்கப்பட்டது. 

பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தனியார் துறையின் ஆதரவு, அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளில் அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை இது மேலும் வலுப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.