தேசிய அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு உயர் அழுத்த சுத்திகரிப்பு உபகரணங்கள்
Tudawe Trading நிறுவனம் அன்பளிப்பு செய்தது
டிசம்பர் 03, 2025
பாதுகாப்பு அமைச்சில் இன்று (03 டிசம்பர்) நடைபெற்ற நிகழ்வொன்றில், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மாஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), தேசிய அனர்த்த நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், Tudawe Trading Pvt Ltd நிறுவனம் அன்பளிப்பு செய்த உயரழுத்த சுத்திகரிப்பு உபகரணங்களை உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டார்.
ஜெர்மனியின் Kärcher நிறுவனத்தின் இலங்கை முகவர் நிறுவனமான Tudawe Trading நிறுவனம், சுமார் ரூ. 3.5 மில்லியன் பெறுமதியான ஐந்து (05) கனரக உயரழுத்த சுத்திகரிப்பு இயந்திரங்களை அன்பளிப்பு செய்தது. டிட்வா புயலின் காரணமாக ஏற்பட்ட பரவலான வெள்ளத்தால் சேதமடைந்த பொது வசதிகளை மீளமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளில் இந்த உபகரணங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kärcher நிறுவனத்தின் உலகளாவிய மனிதாபிமான பொதுநல கொள்கைக்கமைய மேட்கொள்ளப்பட்ட இவ் அன்பளிப்பு, மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்திகரிப்பு பணிகளை விரைவுபடுத்த சுகாதார மற்றும் அனர்த்த நிவாரண குழுக்களுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. மேலும், இயந்திரங்களின் பயன்பாடு தொடர்பில் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் பயிற்சிகளும் வழங்கத் தயார் என Tudawe Trading மேலும் குறிப்பிட்டடுள்ளது.
இந்த அன்பளிப்புக்கு நன்றி தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், தேசிய அனர்த்த நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் இதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.