தேசிய அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு SLT-MOBITEL முக்கியமான
தகவல் தொடர்பு ஆதரவை வழங்குகிறது
டிசம்பர் 06, 2025
நாட்டில் மேட்கொள்ளப்பட்டு வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்த SLT-MOBITEL முக்கிய தொலைத் தொடர்பு ஆதரவை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் நிவாரண நடவடிக்கைகளை திறம்பட ஒருங்கிணைப்பதில் தடையற்ற தகவல் தொடர்புகளை பேணுவது மிக அவசியமானதாகும்.
இதனைக் கருத்தில் கொண்டு ஒரு தொகுதி இணைப்புடன் கூடிய சிம் அட்டைகள் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடம் (ஓய்வு) நேற்று (டிசம்பர் 05) பாதுகாப்பு அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.
SLT-MOBITEL இன் சிரேஷ்ட முகாமையாளர் லசந்த டி சில்வா அதிகாரப்பூர்வமாக கையளிக்கும் விழாவில் அந்நிறுவனம் சார்பில் கலந்துக் கொண்டார்.
இதன் மூலம், பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த நிவாரண நிலையம் மற்றும் முப்படைகள் இணைந்து மேட்கொண்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு SLT-MOBITEL ஒரு தகவல் தொடர்பு பங்காளியாக செயல்படும்.
இந்த முக்கியமான காலகட்டத்தில் தடையற்ற இணைப்பை உறுதி செய்வதற்காக இலவச அழைப்பு மற்றும் டேட்டா பேக்கேஜ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், 24/7 செயல்படும் விசேட தொலைபேசி சேவையின் மூலம் 24 மணிநேர ஆலோசனை சேவையையும் மக்கள் அணுகலாம். இந்தச் சேவை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் வழிகாட்டுதலை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அனர்த்தத்திற்கு பிந்தைய அபாயங்களைக் குறைக்கவும் உதவும் என்பது குறிப்பிடடகத்தக்கது.