“இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்” நிகழ்ச்சி திட்டத்திற்கு லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் வாகனங்களை நன்கொடையாக வழங்கியது

டிசம்பர் 06, 2025

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்பு வசதிகளை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட "இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்" திட்டத்தின் கீழ் தேசிய மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ. 65 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. 

இதன் உத்தியோகபூர்வ கையளிப்பு விழா இன்று (டிசம்பர் 06) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. 

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அதிமேதகு சந்தோஷ் ஜா மற்றும் லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி
உமேஷ் கௌதம் ஆகியோர் நிகழ்விற்கு வருகை தந்த அதிதிகளை வரவேற்றனர். இந்நிகழ்வின் போது , ​​வாகனகளுக்கான சாவிகளை தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு) ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. 

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவும் (ஓய்வு) இந்த நிகழ்வில் பங்கேற்றார். 

நன்கொடையாக வழங்கப்பட்ட வாகனங்களில் garbage compactor, தோஸ்த் troop carrier, 6600-litre தண்ணீர் பவுசர், vehicle carrier, தோஸ்த் lorry, தோஸ்த் van, மற்றும் tipper truck ஆகியவை அடங்கும். 

இவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து, அவசர உதவி, புனரமைப்பு பணிகள் மற்றும் மனிதாபிமான சேவைகளை மேட்கொள்ள உதவும். அத்துடன், அவசரத் தேவையில் உள்ள சமூகங்களுக்கு உதவ லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களின் இரண்டு நாள் சம்பளமான ரூ. 2.5 மில்லியன் தொகையை நன்கொடையாக வழங்கினர்.

நாட்டின் மீட்சி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலையை விரைவாக மீட்டெடுப்பதற்கு ஆதரவளிப்பதில் லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த நிகழ்வில் இந்திய உயர் ஸ்தானிகராலய, லங்கா அசோக் லேலண்ட் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.