அனர்த்தத்திற்கு பிந்தைய உதவிப் பணிகளில் இலங்கை இராணுவம் மும்முரம்

டிசம்பர் 10, 2025

தேசிய அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை தொடரும் வகையில், அத்தியாவசிய பொது சேவைகள் மற்றும் சேதமடைந்த உள்கட்டமைப்ப்பு வசதிகளை மீட்டெடுப்பதற்கு இலங்கை இராணுவம் பல மாவட்டங்களுக்கு படையினரை அனுப்பியுள்ளது.

பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சுத்தமான குடிநீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அம்பகஸ்தோவை பிரதேசத்தில் நீர் சுத்திகரிப்பு அமைப்புகளை பழுதுபார்க்கும் செயல்பாடுகளுக்கு உதவ பாதுகாப்புப் படை (மத்திய) உட்பட்ட இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், சில்மியாபுர நீர் வழங்கல் அமைப்பை சீர் செய்யவும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

பாதுகாப்புப் படை (வன்னி) உட்பட்ட படையினர் தற்போது கெபிதிகொல்லேவ–எல்லேவெவ குளக்கட்டை பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இது பிராந்தியத்தில் விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்தை ஆதரிக்கும் ஒரு முக்கிய நீர்ப்பாசன அமைப்பாகும்.

கொழும்பு-மட்டக்களப்பு ரயில் பாதையை பழுதுபார்க்க உதவுவ பாதுகாப்புப் படையைச் (கிழக்கு) சேர்ந்த இராணுவ வீரர்களும் மனம்பிட்டி பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த முக்கிய பாதையில் பாதுகாப்பாக ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு இராணுவத்தினரின் உதவி பெரிதும் உதவும்.

மேலும், நீலபொல பகுதியில் மகாவலி ஆற்றங்கரையை மீட்டெடுக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இது மேலும் மண்ணரிப்பை தடுக்கவும் அருகிலுள்ள சமூகங்களை வெள்ள அபாயங்களிலிருந்து பாதுகாக்கவும் ஒரு அத்தியாவசிய நடவடிக்கையாகும்.

இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள், தேசிய அனர்த்த நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆதரிப்பதில் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன. முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுக்கவும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தொடர்புடைய அரச நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர்.