DSCSC யின் கல்வி பணியாளர்களுக்கு பாதுகாப்பு செயலாளர்
iPad களைப் வழங்கினார்
டிசம்பர் 10, 2025
பாதுகாப்புச் செயலாளரும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) முகாமைத்துவ சபையின் தலைவருமான எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), இன்று (டிசம்பர் 10) DSCSC கல்லூரியின் கல்வி பணியாளர்களுக்கு 22 புதிய iPadகளை வழங்கி வைத்தார்.
DSCSC பாடநெறி எண். 19 இல் பங்கேற்பாளர்களுக்கான விரிவுரையாற்ற அங்கு விஜயம் செய்த போதே பாதுகாப்புச் செயலாளர் இவற்றை வழங்கினார்.
கையளிப்பை அடயாளப்படுத்துமுகமாக பாதுகாப்புச் செயலாளர் முதல் ஐந்து iPadகளை கல்விப் பிரிவின் மூன்று தலைமை விரிவுரையுயாளர்களுக்கும் சிரேஷ்ட விரிவுரையுயாளர்களுக்கும் வழங்கினார். மொத்தம் 22 iPadகள் இவர்களுக்கு மத்தியில் விநியோகிக்கப்பட்டன.
இந்த iPad கணனிகள் DSCSC யின் பணியாளர்களுக்கு தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் கணிசமாக ஆதரவளிக்கும் என்றும், செயல்திறன் மேம்பாட்டிற்கு பங்களிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.