இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர தூதரகத்தின் புதிய இராணுவ ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
டிசம்பர் 12, 2025நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்திரற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ ஆலோசகர் எயார் கொமடோர் அசேல ஜயசேகர, இன்று (டிசம்பர் 12) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, பாதுகாப்புச் செயலாளர் எயார் கொமடோர் ஜயசேகரவை அன்புடன் வரவேற்று, அவரின் புதிய இராஜதந்திரப் பதவிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். புதிய பணியில் அவரது பொறுப்புகள் மற்றும் ஈடுபாடுகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.