கொழும்பில் கத்தார் தேசிய தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

டிசம்பர் 17, 2025

கொழும்பில் உள்ள கத்தார் தூதரகம் நேற்று (டிசம்பர் 16) கொழும்பில் உள்ள ஐடிசி ரத்னதீபா ஹோட்டலில் கத்தார் தேசிய தினத்தைக் கொண்டாடியது.

இந்த விழாவில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரும் இதில் கலந்துக் கொண்டனர்.

விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை இலங்கைக்கான கத்தார் தூதரகத்தின் Charge d' Affaires Mr. Ali bin Salim Al Nuaimi அன்புடன் வரவேற்றார்.

இந்த நிகழ்வில் வெளிநாட்டு தூதுவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய வணிகத் துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர். இது இலங்கை–கத்தார் நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.