Yoo Brands அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தது
டிசம்பர் 18, 2025Yoo Brands (Pvt) Ltd நிறுவனம், தேசிய அனர்த்த நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, பாதுகாப்பு அமைச்சிற்கு அத்தியாவசிய காலணிப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
ரூ. 6.7 மில்லியன் பெறுமதியான 1,000 ஜோடி காலணிகள் மற்றும் 5,000 ஜோடி காலுறைகள் அடங்கிய இந்நன்கொடை, இன்று காலை (டிசம்பர் 18) பாதுகாப்பு அமைச்சில் வைத்து, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடம் (ஓய்வு), YOO Brands (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஹேமந்த பெரேராவினால், பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது கையளித்து வைக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சும் முப்படைப் படைகளும் இணைந்து முன்னெடுத்து வரும் அனர்த்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கு வகையில் வழங்கப்பட்ட இவ் அன்பளிப்பு பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.