புப்புரெஸ்ஸவில் ‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் மருத்துவ முகாம்

டிசம்பர் 22, 2025

அண்மையில் ஏட்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (MoD SVU), பெண் மருத்துவர்கள் சங்கத்துடன் (LDA) இணைந்து, டிசம்பர் 20 அன்று ஒரு மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தது. 

‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டு புப்புரெஸ்ஸ கே/ கலைவாணி தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்காக இந்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவர் Dr (Mrs) ருவினி ரசிக்கா பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது. அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்த்தித்த Dr (Mrs) பெரேரா அவர்களுடன் கதைத்து அவர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் நேரடியாக தேடிப்பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.