பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு புத்தாண்டு தினத்தில் அதன் சமூக நலத்திட்டங்களை ஆரம்பித்தது
ஜனவரி 01, 2026பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU), அதன் தலைவர் Dr (திருமதி) ருவினி ரசிகா பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ், இன்று (ஜனவரி 01) புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு சமூகநல நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது.
புத்தாண்டைக் குறிக்கும் வகையில், தீவிர மருத்துவ சிகிச்சை சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கும், திரு. ஏ. எம். டபிள்யூ. பண்டார ஏனும் பயனாளிக்கும் தீவிர சிகிச்சை (ICU) படுக்கைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
இவை சேவா வனிதா பிரிவின் தலைவியினால் அம்பாறை ஆதார மருத்துவமனையின் மருத்துவர் Dr உனானி பெர்னாண்டோவுக்கும், குறித்த பயனாளிக்கும் கையளித்து வைக்கப்பட்டது.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட முப்படை (Tri-Service) பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டன.
கல்வித் துறைக்கு ஆதரவளிக்குமுகமாக தெக்கட்டன ஆரம்பப் பாடசாலைக்கு புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன. இப்புத்தகங்கள் மாணவர்கள் முன்னிலையில், பாடசாலையின் ஆசிரியை திருமதி கே. ஏ. எம். என். குமாரப்பேலியிடம் கையளிக்கப்பட்டன. அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் நூலகத்திற்கும் ஒரு தொகை புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), சிரேஷ்ட உதவி செயலாளர் (பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் கொள்கை) திருமதி பிரியங்கிகா ஹேவாரத்ன, மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நலத்திட்டங்கள், பாதுகாப்பு அமைச்சின் தொலை நோக்கத்திற்கு இணங்க, சமூகப் பொறுப்பு, பொது நலன் மற்றும் சமூக வளர்ச்சிக்கான சேவா வனிதா பிரிவின் தொடர்ந்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.