நிக்கவரட்டிய அடிப்படை வைத்தியசாலைக்கு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு ICU படுக்கையை நன்கொடையாக வழங்கியது
ஜனவரி 16, 2026பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் (MoD SVU) தலைவர் Dr (திருமதி) ருவினி ரசிகா பெரேராவின் ஒருங்கிணைப்பின் கீழ், பிரதேசத்தின் தீவிர சிகிச்சை வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் நோயாளி பராமரிப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இன்று (ஜனவரி 16) நிக்கவரட்டிய அடிப்படை வைத்தியசாலைக்கு ஒரு ICU படுக்கை அன்பளிப்பு செய்யப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் மருத்துவ அதிகாரிகளின் பங்கேற்புடன் வைத்தியசாலையில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது இந்த நன்கொடை கையளிக்கப்பட்டது.
இது தேசிய சுகாதார அமைப்பை ஆதரிப்பதில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதுடன் பொதுமக்களுக்கு சேவை செய்வதில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்பு மற்றும் ஒருமைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.