பொது தின நிகழ்வில் முன்னாள் போர் வீரர்கள் மற்றும் மறைந்த போர் வீரர்கள் குடும்பங்களின் தேவைகள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கவனம் செலுத்தினார்
ஜனவரி 30, 2026முன்னாள் போர் வீரர்கள் மற்றும் மறைந்த வீரர்களின் குடும்பங்களின் நலனில் பாதுகாப்பு அமைச்சின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் இன்று (ஜனவரி 30) பொது தின நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த பொதுதின நிகழ்வின் மூலம், ஓய்வு பெற்ற மற்றும் ஊனமுற்ற முன்னாள் போர் வீரர்கள் மற்றும் மறைந்த வீரர்களின் குடும்பத்தினர் தங்களது குறைகள் மற்றும் நலன் தொடர்பான பிரச்சினைகளை பாதுகாப்புச் செயலாளரிடம் நேரடியாக முன்வைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இன்றைய நிகழ்வின் போது முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளை பாதுகாப்புச் செயலாளர் கவனமாக பரிசீலித்ததுடன், அவற்றிற்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சு அதிகாரிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை வழங்கினார். மேலும், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனைக் மேலும் வலுப்படுத்துவதற்காக நடைமுறையில் உள்ள நலத்திட்டங்களைச் சிறப்பாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த படையினருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உரிய மரியாதை செலுத்துவதோடு, முன்னாள் போர் வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பாதுகாப்பு அமைச்சின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த பொது தின நிகழ்ச்சி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.