78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கான வரவேற்பு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு
பெப்ரவரி 04, 2026வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்காக இன்று (04 பெப்ரவரி) கொழும்பு Cinnamon Grand ஹோட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கலந்து கொண்டார்.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர், கௌரவ விஜித்த ஹேரத் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இவ்வரவேற்பு நிகழ்வு, நட்புறவான சந்திப்புகள் மூலம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒரு மேடையாக அமைந்தது.
மேலும் இது இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான உறவுகள் மற்றும் ஈடுபாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.