கொழும்பில் நடைபெற்ற ஈரான் தேசிய தின விழாவில்
பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு

பெப்ரவரி 12, 2026

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அவர்கள், ஈரான் இஸ்லாமிய குடியரசின் இஸ்லாமிய புரட்சியின் வெற்றியின் 47வது ஆண்டு நினைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழா நேற்று (11 பெப்ரவரி) கொழும்பு, ITC ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு இலங்கைக்கான ஈரான் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை ஈரான் தூதுவர் H.E. Dr. Alireza Delkhosh அவர்கள் வரவேற்றார்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் Dr. நலிந்த ஜயதிஸ்ஸ இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வு, இலங்கை மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவையும் இருதரப்பு ஒத்துழைப்பையும் நினைவுகூரும் நிகழ்வாக அமைந்தது.

முன்னாள் ஜனாதிபதி, அமைச்சர்கள், ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முப்படைத் தளபதிகள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.