இந்தோனேசிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்
பெப்ரவரி 17, 2026இலங்கைக்கான இந்தோனேசியக் குடியரசின் தூதுவர், H.E. Dewi Gustina Tobing இன்று (17 பெப்ரவரி) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
வருகை தந்த தூதுவரை அன்புடன் வரவேற்ற பாதுகாப்பு செயலாளர் அவருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இச்சந்திப்பு இலங்கை மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை அளித்ததுடன் இரு தரப்பினரும் பரஸ்பர நலன் குறித்து கலந்துரையாடி, தொடர்ச்சியான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்தனர்.