அனுராதபுர மத்திய கல்லூரிக்கான ஒருதொகைக்கு நன்கொடைகள் பாதுகாப்பு அமைச்சின்
சேவா வனிதா பிரிவிற்கு கையளிக்கப்பட்டது
பெப்ரவரி 25, 2026
அனுராதபுர மத்திய கல்லூரிக்கான ஒரு தொகை நன்கொடையைகள் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவிற்கு இன்று (25 பெப்ரவரி) பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது கையளிக்கப்பட்டது.
இந்த நன்கொடை, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவரான Dr (திருமதி) ருவினி ரசிகா பெரேராவிடம், Trade Promoters Pvt Ltd நிறுவனத்தின் தலைவர் திரு. ரொஹான் பெர்னாண்டோ மற்றும் ‘Pride of Thurstan’ அமைப்பின் தலைவர் திரு. நோயல் ஜோசப் ஆகியோரால் கையளித்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) கலந்து கொண்டார்.
Dr (திருமதி) பெரேரா, தகுந்த காலத்தில் வழங்கப்பட்ட இந்த உதவிக்காக அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். இத்தகைய அன்பளிப்புகள் மூலம் , கல்வி நடவடிக்கைகளுக்காக உதவி செய்து இளைய தலைமுறையை வலுப்படுத்தும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கின்றன என அவர் குறிப்பிட்டார்.
அன்பளிக்கப்பட்ட பொருட்கள் அனுராதபுர மத்திய கல்லூரிக்கு விரைவில் வழங்கிவைக்கப்படும். இதன் மூலம் நடப்பு கல்வியாண்டிற்குத் தேவையான வளங்கள் கல்லூரிக்கு கிடைக்கப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.