பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் கண்டியில் ‘பொது தின’ நிகழ்ச்சி நடைபெற்றது
மார்ச் 09, 2026‘பொது தின’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஓய்வு பெற்ற, காயமடைந்த மற்றும் உயிர்நீத்த யுத்த வீரர்களின் குடும்பங்களின் நலன் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கடந்த சனிக்கிழமை (மார்ச் 07) கண்டியில் நடைபெற்ற சிறப்பு அமர்வுக்கு தலைமை தாங்கினார்.
இது, இராணுவப் பணியாளர்கள், முன்னாள் யுத்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தங்களது குறைகள் மற்றும் நிர்வாக சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை முன்வைக்க வாய்ப்பாக அமைந்தது. பிரதி அமைச்சர் பங்கேற்றவர்களின் குறைகளை கவனமாக கேட்டறிந்து, முன்வைக்கப்பட்ட அனைத்து விடயாங்கள் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதன் போது, முன்னாள் யுத்த வீரர்களின் நலன், நிர்வாக நடைமுறைகள் மற்றும் பொதுமக்களின் குறைகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் பரிசீலிக்கப்பட்டன. இத்தகைய முயற்சிகள், நாட்டிற்காக சேவை செய்தவர்களின் குடும்பங்களுக்கு நேரடி உதவியும் நிலையான தீர்வுகளையும் வழங்குவதற்கான பாதுகாப்பு அமைச்சின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும்.
இந்த ‘பொது தின’ அமர்வு, முன்னாள் யுத்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலனையும் மரியாதையையும் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு அமைச்சின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது. மேலும், தாய்நாட்டை பாதுகாக்க ஆயுதப்படை உறுப்பினர்கள் ஆற்றிய தன்னலமற்ற சேவைக்கும் உயர்ந்த தியாகங்களுக்கும் அமைச்சின் ஆழ்ந்த நன்றியையும் இது வலியுறுத்தியது.