--> -->

வவுனியா பொது இடங்களை தொற்று நீக்கம் செய்யும் பணிகள் இராணுவத்தினரால் முன்னெடுப்பு

ஏப்ரல் 30, 2021

வவுனியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பொதுவிடங்களில் ஆபத்தினை குறைக்கும் வகையில் இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் படைவீரர்களினால் தொற்று நீக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய, மக்கள் ஒன்று கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில்வே நிலையம், நலன்புரி நிலையங்கள், வங்கிகள், பொது மக்கள் ஒன்று கூடும் இடங்கள் மற்றும் முச்சக்கரவண்டி நிறுத்துமிடங்கள் என்பன தொற்று நீக்கம் செய்யப்பட்டன.

குறித்த பணிகள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார மற்றும் 56வது பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில ஆகியோரின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டது.

படையினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகரசபை ஊழியர்ககளும் ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.