--> -->

2021ம் ஆண்டுக்கான 'நீர்க்காக கூட்டுப்பயிற்சி XI ஆரம்பம்

செப்டம்பர் 04, 2021

இராணுவத்தின் ஏற்பாட்டில் முப்படையினர் ஒன்றினைந்து மேற்கொள்ளும் களமுனைப்போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டுப்பயிற்சி XI - 2021 மின்னேரியாவில் நேற்று (செப், 03) ஆரம்பமானது,

களமுனைப் போர் பயிற்சியின் ஆரம்ப நிகழ்வு, அந்தந்த முப்படைகளின் களமுனைப் போர் பயிற்சி வல்லுனர்களின் இணைய வழி பங்குபற்றுதலுடன்  மின்னேரியாவின் காலாட்படை பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

இந்த வருடத்திற்கான களமுனைப்போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டுப்பயிற்சி ' உயிரியல் குமிழி' எனப்படும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெறுவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு இராணுவ வீரர்களும் இந்த ஆண்டுகளமுனை போர்ப் பயிற்சியில் பங்குபற்றவுள்ளனர். இப்பயிற்சி 11வது வருடமாக இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முப்படைகளின் கூட்டு பயிற்சி ஆகும். வெளிநாட்டு படைகள் உட்பட மொத்தம் 2846 படையினர் இந்தப் பயிற்சியில் பங்குபற்றுகின்றனர். இதில்வெளிநாட்டுப்படையினர் பார்வையாளர்களாகவோ, பங்களிப்பாளர்களாகவே பங்குபற்றவுள்ளனர்.

இந்த களமுனைப் போர்ப்பயிற்சிகள், மன்னார், வில்பத்து, அரிப்பு, துணுக்காய், வவுனிக்குளம், நெடுங்கேணி, சுண்டிக்குளம், நாயாறு, திரியாய், நிலாவெளி தோப்பூர், இலங்கந்தை, வாகரை, தோணித்தட்டுமடு, நாரகமுல்ல, கஞ்சிகுடிச்சாறு, செங்கலடி, தம்புள்ள, மொரகஹகந்த, மீமுரே, கொழும்பு மற்றும் டிக்கோவிட்ட ஆகிய பகுதிகளில் இடம்பெறவுள்ளது.

களமுனைப்போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டுப்பயிற்சி XI - 2021 இம்மாதம் 25ம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன் நிறைவு தின நிகழ்வு இம்மாதம் 26ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.