--> -->

குட்டிகலவில் 200 ஏக்கர் பரப்பளவில் இராணுவத்தினரால் தென்னைப் பயிர்ச்செய்கை

டிசம்பர் 27, 2021

குட்டிகலவில் உள்ள இராணுவ பொது சேவைப் படைப்பிரிவினால் தென்னைப் பயிர்ச்செய்கை திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தென்னைப் பயிர்ச்செய்கை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தென்னம் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டம், இராணுவ பொது சேவைப் படைப்பிரிவின் கேர்ணல் கொமடான்ட் பிரிகேடியர் எச்ஏபிபிகே.ஹேவாவஸத்தின் மேற்பார்வையின் கீழ் இலங்கை தெங்கு பயிர்ச் செய்கை சபையின் வழிகாட்டுதலுக்கமைய ஆரம்பிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிகின்றன.

இராணுவ பொது சேவைப் படைப்பிரிவினால் முன்னெடுக்கப்படும் இந்த தென்னைப் பயிர்ச்செய்கை திட்டத்திற்கு இப்படையணியைச் சேர்ந்த கட்டளை அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் ஆகியோர் பங்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.