--> -->

துப்பாக்கி பயிற்சி கல்லூரியில் துப்பாக்கிச்சுடும் போட்டிகள்

ஜனவரி 19, 2022

சிப்பாய்களுக்கு இன்றியமையாத அம்சங்களான ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை சிப்பாயின் உடல் மற்றும் மன வலிமையை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதால், அவசியமான சந்தர்ப்பங்களில் போரிடுவதற்கும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் தயார் நிலையில் இருக்கும் வீரர்களை உருவாக்க முடியும்.

எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளகூடிய மிகவும் வலிமையாக கூட்டாக காணப்படும் இலங்கை இராணுவத்தில் ஒரு சிப்பாய் தனது ஆயுத பயிற்சிகளில் தேர்ச்சி பெறத் தவறும் பட்சத்தில் அவருக்கு ஆயுதம் ஏந்திச் செல்லவோ துப்பாக்கிச் சுடுவதற்கோ அனுமதி வழங்கப்பட மாட்டாது.

எனவே, அதனால் நீண்ட நேர பயிற்சிகளை தடையின்றி பெற்றிருப்பது அவசியம் என்பதோடு, சுய ஒழுக்கத்திற்கு முன்னுரிமை அளித்து பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக அர்பணிப்புக்களை செய்துக்கொள்ள கூடிய வகையில் தம்மை வடிவமைத்து கொள்வது அவசியமாகும்.

அதற்கிணங்க, இராணுவ சிறுரக ஆயுத சங்கதின் மேற்பார்வையின் கீழ் தியதலாவ துப்பாக்கிச் சூட்டுத் திடலில் ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பமான “படையணிகளுக்கான உள்ளக கம்பெட் மீ இலக்கை நோக்கிய 10 சுடுதல் 2021” ஒரு மகளிர் அணி உள்ளடங்களாக 34 அணியினரின் பங்கேற்புடன் இடம்பெற்று வருகிறது.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணகருவான “இராணுவத்தின் முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020 – 2025” இற்கு அமைவாக, இந்த பயிற்சிகள் “துப்பாக்கிச் சுடும் வீரர்களின் இல்லம்” என அறியப்படும் தியதலாவையிலுள்ள குறிபார்த்து சுடுதல் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி கல்லூரி வளாகத்தில் அதன் தளபதி பிரிகேடியர் விபுல இஹலகே தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த பயிற்சிகள் ஜனவரி 29 அன்று பரிசளிப்பு நிகழ்வுடன் நிறைவடையவுள்ளது.

மேற்படி போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் 34 அணிகளும் புதியவர்களுக்கான பிரிவு, திறந்த போட்டிகள், சிரேஷ்ட அதிகாரிகளுக்கான பிரிவுகள் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் போட்டியிடும் நிலையில், 21 அணிகள் திறந்த சுற்றிலும், 13 அணிகள் புதியவர்களுக்கான திறந்த சுற்றிலும் போட்டியிடவுள்ளனர்.

அதன் படி சிரேஷ்ட அதிகாரிகளுக்கான பிரிவில் லெப்டின் கேணல் நிலை அதிகாரிகளின் கீழுள்ள கட்டளை அதிகாரிகள் பங்குபற்றும் அதேவேளை பிரிகேடியர் தர அதிகாரிகளுக்கான போட்டி தனியாக இடம்பெறும்.

இந்த போட்டிகளின் போது 9 கிமீ ஓட்டப்போட்டிகள், 300 மீ இலக்கை நோக்கிய 10 சுடுதல் , 200 மீ இலக்கை நோக்கிய 20 சுடுதல், 100 மீ இலக்கை நோக்கிய 10 சுடுதல், துப்பாக்கிச் சுடுதல் மற்றும் 50 மீ இலக்கை நோக்கிய 10 சுடுதல் என்பவற்றை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

‘காம்பாட் சுடுதல் போட்டி 2021’ உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்ட போட்டிகளுக்காக சிறந்த வீரர்களை தெரிவு செய்தல், துப்பாக்கிச் சூட்டு திறனை மேம்படுத்தல், படைப்பிரிவுகளிலுள்ள அணிகளுக்கிடையில் நட்புறவை மேம்படுத்தல் உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாக கொண்டு இராணுவ சிறியரக ஆயுத சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி - www.army.lk