--> -->

கடற்படையினர் வடக்கு மாகாணத்தில் நீர் விளையாட்டுகளை ஊக்குவிப்பு

ஜூலை 06, 2022

இலங்கை கடற்படை (SLN) அண்மையில் (ஜூலை 04) காரைநகர் கால்வாயில் ‘டிராகன் படகு சம்பியன்ஷிப்’போட்டி நிகழ்ச்சி  ஒன்றை நடத்தியது. பிராந்தியத்தில் விளையாட்டுகள் மூலம் சிவில்-இராணுவ உறவை மேம்படுத்துதல் மற்றும் நீர் விளையாட்டு மற்றும் உயிர்காக்கும் நுட்பங்கள் குறித்த சமூகங்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் இந்த விளையாட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.

பாடசாலைகளுக்கிடையிலான சம்பியன்ஷிப் போட்டியில் எட்டு பிராந்திய பாடசாலைகள் பங்குபற்றியதில், வியாவில் சைவ வித்தியாலயம் வெற்றிக்கிண்ணத்தை வென்றதுடன், யார்ல்டன் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.

‘கப்பல்களுக்கிடையிலான சம்பியன்ஷிப்’ போட்டியில் கடற்படையின் கப்பற்படை பிரிவு வெற்றிக்கிண்ணத்தை வென்றதுடன், இலங்கை கடற்படை கப்பல் காஞ்சதேவ இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் பணிப்புரைக்கு அமைய வடமாகாணத்தில் உள்ள படகோட்டுதல் சம்மேளனம், உயிர்காக்கும் சங்கம், ஏனைய விளையாட்டு சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து கடற்படை இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியது.

கடற்படையின் பிரதிப் பிரதம அதிகாரியும், வடக்கு கடற்படைப் பிராந்திய கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா இந்த நீர் விளையாட்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

யாழ்ப்பாணப் பாடசாலைகள் மற்றும் கடற்படை அணிகளுக்கு முறையே ‘பாடசாலைகளுக்கிடையிலான’ மற்றும் ‘கப்பல்களுக்கிடையிலான’ சம்பியன்ஷிப் போட்டிகள் என இரு பிரிவுகள் கீழ் போட்டிகள் நடாத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இன்நிகழ்வைக் கண்டுகளிக்க வருகை தந்திருந்ததாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.