--> -->

கல்பிட்டி கடற்பரப்பில் மூழ்கிய இழுவை படகில் இருந்த 38 உள்ளூர் சுற்றுலா பயணிகளை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு

ஒக்டோபர் 02, 2022

கல்பிட்டியிலிருந்து பத்தலங்குண்டுவ தீவுக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற போது கடல் நீர் கசிவு காரணமாக ஆபத்தில் சிக்கிய இழுவை படகொன்றில் இருந்த முப்பத்தெட்டு (38) பேரை இலங்கை கடற்படையினர் இன்று (2022 அக்டோபர் 01) மீட்டுள்ளனர்.

இலக்கம் CN/34/4 இன் கீழ் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்துக்காக பதிவுசெய்யப்பட்ட ட்ரீம் டிரவல்ஸ் என்ற இழுவை படகு கல்பிட்டி இறங்குதுறையில் இருந்து பத்தலங்குண்டுவ தீவுக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றபோது, குறித்த படகில் கீழ் பகுதியில் இருந்து படகுக்குள் கடல் நீர் கசிந்ததால் படகு மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக படகின் உரிமையாளர் கல்பிட்டி இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்திற்கு இன்று (2022 அக்டோபர் 01,) பிற்பகல் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு உடனடியாக பதிலளித்த கடற்படையினர், வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட P152 மற்றும் P228 கரையோர ரோந்து படகுகள் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் CG 202 கரையோர ரோந்து படகு குறித்த கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

இதன்படி, முப்பத்தி இரண்டு (32) ஆண்கள் (டிராலர் படகு நடத்துபவர்கள் 03 பேர் உட்பட) மற்றும் ஆறு (06) பெண்கள் உட்பட முப்பத்தெட்டு (38) உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்பட்ட இழுவை படகில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு கல்பிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

மேலும், இலங்கைக்கு சொந்தமான கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு தேவையான நிவாரணங்களை வழங்க இலங்கை கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.

நன்றி - www.navy.lk