செய்திகள்
ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனத்தின் ‘சேவா அபிநந்தன பிரணாம’ விருதுகளை வழங்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுனவத்தின் ‘சேவா அபிநந்தன பிரணாம’ சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையில் இன்று (டிசம்பர் 09) பத்தரமுல்லை சுஹுருபாய வளாகத்தில் நடைபெற்றது.
பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு
பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ரொலாண்டோ பி கோமஸ் இன்று (டிசம்பர் 09) பத்தரமுல்ல அக்குரேகொடவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவை சந்தித்தார்.
பல்வகை இராணுவ உற்பத்திக்கான இராணுவப் போர்க்கருவி படையணி தொழிற்சாலை திறந்து வைப்பு
இராணுவத் போர்க்கருவி படையணி இராணுவ தயாரிப்புகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் பெருந் தொகை அந்நியச் செலாவணியை சேமிக்கும் வகையிலும், இராணுவ போர்க்கருவி உற்பத்தியில் தன்னிறைவு அடையும் நோக்கத்திலும் இராணுவ ஆயுதக் கைத்தொழில் சாலை இடம் மாற்றப்பட்டு இன்று காலை (8) திறந்து வைக்கப்பட்டது. வேயங்கொட மத்திய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் களஞ்சியசாலை வளாகத்தில் இலங்கை இராணுவத்தின் முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020-2025' க்கு அமைவாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை முன்னறிவிப்பு
வளிமண்டலவியல் திணைக்களத்தின் சமீபத்திய கணிப்புகளின்படி, நாடு முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என முன்னறிவிப்பு விடுத்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் (திருகோணமலைக்கு வடகிழக்கே 300 கி.மீ. அளவில்) சூறாவளியான “மண்டூஸ்” புயல் நாளை (டிசம்பர் 09) நள்ளிரவு தென்மேற்கு வங்கக்கடல் ஊடாக மேற்கு-வடமேற்கு திசைகளில் நகரும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tamil
இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி பாதுகாப்பு செயலாளரை சந்திப்பு
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல்
சன்ன வீரசூரிய இன்று (டிசம்பர் 08) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல்
கமல் குணரத்னவை சந்தித்தார்.
உபவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்களின் அமர்வு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில்
உபவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்களின் 457வது அமர்வு டிசம்பர் 03 அன்று ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்
நடனம் மற்றும் இசைக் குழுக்கள் சாம்பியனாக தெரிவு
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) நடனம் மற்றும் இசைக் குழுக்கள் ஆசிய பசிபிக் தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் (APIIT) மாணவர் கழகத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட 'TANTALIZE-2022' பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான திறமைப் போட்டியில் மூன்று முக்கிய பிரிவுகளில் சாம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையுடனான பாதுகாப்பு தொடர்பான உறவுகளை மேம்படுத்துவதற்கு
செனகல் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் உறுதி
செனகல் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அப்துல்லாயா ட்ரேரோ, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
ரஷ்ய தூதுவர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு லெவான் தகர்யான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.
எங்களுக்கு மிகவும் தகுதியான, திறமையான மற்றும் தொழில்முறை அதிகாரிகள் தேவை - பாதுகாப்பு செயலாளர்
போர்க்களத்தில் வெற்றி தோல்வி என்பது போரின் பின்னணியை புரிந்து கொண்டு வெற்றியை தொடரும் துணிச்சலான தலைவரை பொறுத்தே அமையும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை விமானப்படையின் 8வது குழு மத்திய ஆப்பிரிக்காவில் ஐ.நா அமைதிகாக்கும் கடமைகளில் பங்கேற்பு
இலங்கை விமானப்படையின் 8வது குழு மத்திய ஆபிரிக்காவில் ஐக்கிய நாடுகளில் அமைதிகாக்கும் கடமைகளில் பங்கேற்பதற்காக டிசம்பர் நான்காம் திகதி (நேற்று) இலங்கையையில் இருந்து வெளியேறியது.
கங்கொடவில சமாதி விகாரை தூபியின் ‘கோபுர கலசத்தை’ பாதுகாப்பு செயலாளர் திரை நீக்கம் செய்துவைத்தார்
நுகேகொட கங்கொடவில சமாதி விகாரையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சைத்திய (தூபி) பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவினால் டிசம்பர் 03 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
Tamil
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை தொடர்பாக
ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையை முறையாக நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (30) முற்பகல் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
Tamil
புதிய இராணுவ பிரதம அதிகாரி நியமிக்கப்பட்டார்
Tamil
நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்திதார்
இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு மைக்கல் அப்பிள்டன் இன்று (நவம்பர் 29) பத்தரமுல்லையில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
சட்டவிரோத சுறா துடுப்புகளுடன் மீன்பிடி படகு ஒன்றை கரையோர பாதுகாப்பு படையினரால் கைது
சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட சுறாமீன் துடுப்புகளை வைத்திருந்த பல நாள் மீன்பிடிக் கப்பலும் ஆறு மீனவர்களும் கடந்த சனிக்கிழமை (26) இலங்கை கரையோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tamil
Tamil
P 627 கப்பல் விஜயபாகு என்ற பெயரில் துறைமுக அதிகார சபைக்கு ஜனாதிபதி கையளித்தார்
அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட P 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பல் ‘விஜயபாகு” என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் அதிகார சபைக்கு கையளிக்கும் நிகழ்வு, இன்று (22) மாலை கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தில் இடம்பெற்றது.
51வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் நேற்று மாலை (நவம்பர், 21) இடம்பெற்ற 51வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.
மடுவில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு மற்றும் மட்டக்களப்பில் பாடசாலை விளையாட்டு மைதானம் என்பன மக்களிடம் கையளிப்பு.
வன்னி மாவட்ட செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மடு பெரியபாண்டிவிரிச்சான் பிரதேசத்தில் இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பமொன்றுக்கு புதிய வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு அண்மையில் கையளிக்கப்பட்டது.






















