--> -->
செய்தி   ஜனாதிபதி செய்தி

ஜனாதிபதி செய்தி

பாதுகாப்பு செய்திகள் | Defense News

“Earth Watchmen” திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்

2019 ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணத்துடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் 2 மில்லியன் மரக்கன்றுகளை நடும் “Earth Watchmen” திட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (21) முற்பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய பீட வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

வடக்கில் 1200 ஏக்கருக்கு மேற்பட்ட காணி விடுவிப்பு

முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் உடையார்கட்டு மற்றும் மூன்று இராணுவப் பண்ணைகள் உட்பட இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மொத்தம் 1201.88 ஏக்கர் திங்கள் கிழமையன்று ( ஜனவரி,21)விடுவிக்கப்பட்டன. இதற்கேற்ப, விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்கள், முல்லைத்தீவு முள்ளியவளை, வித்யானந்த மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

இலங்கை – பிலிப்பைன் அரச தலைவர்கள் சந்திப்பு

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக தொடர்புகளை மீண்டும் முன்னெடுத்து செல்வதற்காக பொருளாதார சபையொன்றினை நிறுவுதல் தொடர்பாக இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தினர்.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

பாடசாலை சூழலில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகள் பரவ இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி பொலிசாருக்கு பணிப்பு

பாடசாலை பிள்ளைகளை இலக்காகக்கொண்டு பாடசாலை சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை அனைத்து தரப்பினர்களினதும் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

திடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

திடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பதவியேற்பு நிகழ்வின் நான்கு ஆண்டு பூர்த்தி இன்று

இன்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் தன்னை இந்த நாட்டின் அரச தலைவனாக தேர்ந்தெடுத்த மக்கள், தன்மீது கொண்ட எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் வெற்றியடைந்துள்ளதைப் போலவே சில வேலைத்திட்டங்கள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன என்றும், அதனூடாக பெற்றுக்கொண்ட வெற்றிகளை மேலும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதை போன்றே தோல்விகளை வெற்றியை நோக்கி வழி நடத்த வருங்காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

வறுமை ஒழிப்பினை முதன்மை நோக்காகக்கொண்டு புதிய வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு

மக்களின் வறுமை நிலையை ஒழிப்பதனை முதன்மை நோக்காகக்கொண்டு புதிய வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

படை வீரர்களுக்கான நலத்திட்டம்

தாய் நாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களின் குழந்தைகள், மனைவிகள், பெற்றோர் ,இரத்த உறவுகள், யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற வீரர்கள் மற்றும் சேவையில் உள்ள முப்படை வீரர்கள் ஆகியோருக்கு நன்மை பயக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் பாரிய நலன்புரி திட்டமான 'சத்விரு அபிமன்' திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | Defense News

“சத்விறு சந்ஹிந்த” திட்டத்தினூடாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் ஜனாதிபதியினால் படைவீரர்களுக்கு கையளிப்பு

பத்தரமுல்ல அபே கமவில் இன்று (மே,10) இடம்பெற்ற “சத்விறு சந்ஹிந்த” படைவீரர்களுக்கான வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.