ஜனாதிபதி செய்தி
தொழிலாளர் தினச் செய்தி
உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் விளைவாக தொடங்கிய உலக தொழிலாளர் தினத்தின் 138 ஆவது வருடக் கொண்டாட்டத்தின் போது , ஒரு நாடாக நாம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறோம்.
பண்டிகை காலத்துக்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றலை முழுமைப்படுத்துங்கள் – ஜனாதிபதி தெரிவிப்பு…
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றலை முழுமைப்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான விசேட குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.
Tamil
Tamil
12 வருடங்களுக்கு பின்னர் கவசப் படையணியின் களத் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அமர்வுகள் ஆரம்பம்
கற்பிட்டியிலுள்ள இலங்கை விமானப் படையின் துப்பாக்கிச் சுடும் களப் பயிற்சி தளத்தில், இரண்டு நாள் (செப்டம்பர் 21-22) இளம் கவச படையணி அதிகாரிகளுக்கான பாடநெறி, போர்க்கள கவச வாகன செலுத்துனர்களுக்கான பாடநெறி, துப்பாக்கி பிரயோகம் தொடர்பிலான பாடநெறி ஆகியவற்றை தொடரும் வாய்ப்பு 15 அதிகாரிகள் மற்றும் 130 சிப்பாய்களுக்கு 12 வருடங்களுக்கு பின்னர் மீட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது.
Tamil
ஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை
எமது நாட்டுக்கு மட்டுமன்றி, அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடையாத அனைத்து நாடுகளுக்குமே, இன்று ஒரு பாரிய பிரச்சினையாக கொவிட் 19 தொற்றுப் பரவல் மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள சுமார் 178 மில்லியன் பேர், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3.8 மில்லியன் பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
Tamil
வைரஸ் பரவலை தடுக்க மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பு
அனைத்து மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவும், அனைத்து கூட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை ரத்து செய்யவும், வணிக நிறுவனங்களில் நுழைந்து தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளை மே 30 வரை தனிமைப்படுத்தவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
சினோபார்முக்கு சாதகமான பதில்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் தெட்ரோஸ் அதனொம் மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையே நேற்றைய தினம் (மே, 07) ஸூம் இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக அமைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Tamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம்
பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (08) கூடியது.
ஜனாதிபதியின் மகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானின் அருள் ஒளி கொண்டு அறியாமை இருள் அகற்றி, ஞானத்தின் மகிமையை அடைவதற்கான பிரார்த்தனையுடன், பழங்காலத்திலிருந்தே மகா சிவராத்திரி தினத்தில் மிகுந்த பக்தியுடன் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tamil
'தீகவாபிய அருண' நிதியத்திற்கு பௌத்த தொலைக்காட்சி சேவை 50 மில்லியன் ரூபா நன்கொடை
'தீகவாபிய அருண' நிதியத்திற்கு பௌத்த தொலைக்காட்சி சேவையினால் 50 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.
காலி முகத்திடல் விற்பனை நிலையங்களின் புனரமைப்புப் பணிகளை கடற்படை கையேற்பு
காலி முகத்திடலில் நிறுவப்பட்டுள்ள விற்பனை நிலையங்களை நவீனமயமாக்கும் புதிய செயற்திட்டத்தை கடற்படை நேற்றய தினம் பொறுப்பேற்றுக் கொண்டது. குறித்த இந்த செயற்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய முன்னெடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி
புத்தாண்டின் விடியல், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்நோக்கும் சவால்களை சரியாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கும், உறுதியுடன் முன்னேறுவதற்கும் எம்மை ஊக்குவிக்கின்றது. எனவே, 2021 ஆம் ஆண்டை ஒரு நேர்மறையான மனப்பாங்குடனும், திடவுறுதி மற்றும் அர்ப்பணிப்புடனும் நாம் வரவேற்கிறோம்.
நத்தார் வாழ்த்துச் செய்தி
உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் இறைவன் மீதான பக்தியுணர்வை தூண்டும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது உயிர்ப்பு விழாவுக்கு அடுத்ததான உன்னதமான சமயப் பண்டிகையாகும். இது இயேசு நாதர் போதித்த மற்றும் நடைமுறையில் வாழ்ந்துகாட்டிய அமைதி, அன்பு, இரக்கம், சகவாழ்வு, கருணை போன்ற பண்பட்ட மனித சமூகத்தின் அடித்தளத்தை வடிவமைக்கும் உன்னத பெறுமானங்களை உள்ளடக்குகிறது. சமூக ரீதியாக, நத்தார் கிறிஸ்தவ குடும்பங்கள் ஒன்றுகூடுவதற்கும், பரிசுகளை பரிமாறிக்கொள்வதற்கும், பகைமைகளை மறந்து பிணைப்பினை புதுப்பிப்பதற்குமான ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாகும்.
மிரிஸவெட்டிய மகா சேயவில் பெளத்த மத அனுஸ்டானங்கள் முன்னெடுப்பு
அனுராதபுர மிரிஸவெட்டிய மகா சேயவில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட பெளத்த மத அனுஸ்டானங்களில் ஜனாதிபதி கொட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டார்.
ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் தீபாவளி பண்டிகை தினமான இன்று அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி சமயக் கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.
ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி
இலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலும் பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து சகோதரத்துவத்துடன் முஹம்மத் நபியவர்களின் மீலாத் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
சமூக ஐக்கியத்தை மேலும் வளர்த்துக்கொள்வதற்கு ஹஜ் பெருநாள் வழிவகுக்கும் - ஜனாதிபதி
இறைவனுடனான நெருக்கத்தையும் சமூக ஐக்கியத்தையும் மேலும் வளர்த்துக்கொள்வதற்கு இந்த நன்னாள் உதவும் என்று எண்ணுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள ஹஜ் பெருநாள்
வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரிவோர் அனைவரும் நாடு திரும்புவதற்கான சந்தர்ப்பம் – ஜனாதிபதி உறுதியளிப்பு
வெளிநாடுகளில் இருந்து வருகைதருவோரை PCR பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் முடிவுகளை விமான நிலைய வளாகத்திலேயே பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க ஜனாதிபதி செயலணி
கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.