ஜனாதிபதி செய்தி
ஜனாதிபதி ஊடக விருது விழாவில் ஜனாதிபதி அவர்கள் கலந்து சிறப்பிப்பு
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஜனாதிபதி ஊடக விருது விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் வெகுசன ஊடக மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களும் கலந்து கொண்டார்.
இலங்கை பொலிஸ் சேவையை தேசிய, சர்வதேச மட்டத்தில் மதிப்புமிக்கதாக மாற்ற எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு
இலங்கை பொலிஸ் சேவையை தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் உயர் மதிப்பினையுடைய சேவையாக மாற்றுவதற்காக பொலிஸ் திணைக்களம் தனது கட்டுப்பாட்டின் கீழ் காணப்படும் இக்காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
வட, கிழக்கு அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை
வட, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆறாவது அமர்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (03) பிற்பகல் பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.
ஜனாதிபதி பராளுமன்றத்திற்கு விஜயம்
பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் செலவுத் தலைப்புகள் தொடர்பாக இன்று (04) பாராளுமன்றத்தில் விவாதம் மேற்கொள்ளப்பட்டதுடன், அதனை முன்னிட்டு பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் பல முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.
ஜனாதிபதி தலைமையில் 'பக் மகா உறுதிமொழி'
நாட்டைப் போதையிலிருந்து விடுதலை பெறச் செய்யும் எண்ணக்கருவிலான 'பக் மகா திவுரும' சித்திரை மாத உறுதிமொழி வழங்கும் நிகழ்வு இன்று (மார்ச், 03) நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. இதன் பிரதான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில், சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமான நிறைவை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்கு எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தயார் – ஜனாதிபதி
பாரிய உயிர் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது தான் போதைப்பொருளுக்கு எதிரான போராட்ட களத்தில் இறங்கியது எதிர்கால சந்ததியினருக்காக நல்லதோர் தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவே என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் அந்த போராட்டத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையில் 769 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருளை பகிரங்கமாக அழிக்கும் நடவடிக்கை
769 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருளை பகிரங்கமாக அழிக்கும் நடவடிக்கை இன்று (ஏப்ரல், 01) களனி களஞ்சியத் தொகுதியில் இடம்பெற்றது. கடந்த காலங்களில் சட்ட அமலாக்க முகவர் நிலையங்கள் மூலம் கைப்பற்றப்பட்ட 10 பில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேன் போதைப்பொருள் அழித்தல் செயற்பாட்டிற்காக புத்தளத்தில் உள்ள சீமெந்து கூட்டுத்தாபன வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் செறிவு குறைக்கும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
தேரவாத திரிபீடகத்தை யுனெஸ்கோ உலக ஞாபகப் பதிவேட்டில் உட்படுத்துவதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது
புத்தபெருமானின் போதனைகளை பாதுகாத்து, பலப்படுத்தி எழுத்து மூலம் உலகிற்கு முன்வைக்கும் பொறுப்பு இலங்கையர்களான எம்முடையதாகும் என ஜனாதிபதி தெரிவிப்பு
அநுராதபுரம் “மெத்சிறி செவன” சிறுநீரக நோயாளர் பராமரிப்பு நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைப்பு…
சிறுநீரக நோய்த்தடுப்பிற்கு கடந்த 04 வருடங்களாக முக்கியத்துவமளித்து மேற்கொள்ளப்பட்ட பாரிய வேலைத்திட்டங்களினால் நாடு முழுவதிலுள்ள சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளமை காணக்கூடியதாக உள்ளது என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
Tamil
உன்னத பௌத்த போதனையை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி
தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவுக்கு முன்னர் “திரிபீடகாபிவந்தனா” வாரத்தை பிரகடனப்படுத்தியதன் நோக்கம் நாட்டினுள் பௌத்த புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு திரிபீடகம் தொடர்பிலான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்குமேயாகும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
ஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் விசேட அதிதியாக கலந்துகொள்ள ஜனாதிபதி கென்யா பயணம்
கென்யாவின் நைரோபி நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் விசேட அதிதியாக கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (13) முற்பகல் கென்யாவிற்கு பயணமானார்.
போதைப்பொருள் ஒழிப்புக்கு ஏப்ரல் மூன்றாம் திகதியின் பின்னர் முப்படையினரின் கூடுதல் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படும் – ஜனாதிபதி
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 03ஆம் திகதியின் பின்னர் பொலிஸாருடன் முப்படையினரும் பலமான பங்களிப்புகளை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு ரணவிரு கொடி அணிவிப்பு
போர் வீரர்கள் நினைவு மாதத்தினை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு முதலாவது ரணவிரு கொடியினை அணிவிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச், 05) இடம்பெற்றது.
ஜனாதிபதி வர்ண விருது இரு இலங்கை விமானப் படை பிரிவுகளுக்கு வழங்கிவைப்பு
முப்படைகளின் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்கள் இலங்கை விமானப் படையின் 07ஆம் இலக்க மற்றும் 08ஆம் இலக்க படைபிரிவுகளுக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்கியுள்ளார். இந்நிகழ்வு ஹிங்குரக்கொட விமானப் படை முகாமில் நேற்று (மார்ச், 02) இடம்பெற்றது.
Tamil
சிகிச்சை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டமையினால் கடந்த இரண்டு வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு
கண்டி சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது
ஜனாதிபதி சாலியபுர கஜபா படைப்பிரிவின் தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயம்
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (25) முற்பகல், அநுராதபுரம் சாலியபுர கஜபா படைப்பிரிவின் தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றத்தை அடைய முடியும் – ஜனாதிபதி
2019ஆம் ஆண்டில் தென் மாகாணத்தில் கிராமசக்தி மக்கள் இயக்கத்தை முன்னெடுப்பதற்கு 423 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு தேசிய நிதியமொன்று தாபிக்கப்படும் – ஜனாதிபதி
சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் தேசிய நிதியமொன்றை தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி
இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலமொன்றை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
இலங்கை தனது 71வது சுதந்திரதினத்தை கொண்டாடுகிறது
இலங்கையின் 71 வது சுதந்திர தினம் இன்று ஆகும்.71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளும் பிரதான சுதந்திர தின அணிவகுப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்றது.
ஜனாதிபதி மேஜர் வசந்த தினேஷ் ஜயவிக்ரமவின் இல்லத்திற்கு விஜயம்
ஐ.நா. அமைதிகாக்கும் படையில் இணைந்து மாலி நாட்டில் பணியிலிருந்தபோது உயிர்நீத்த மேஜர் வசந்த தினேஷ் ஜயவிக்ரமவின் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினரினால் தயாரிக்கப்பட்ட இரண்டு படகுகள் சீஷேல்ஸ் அரசிடம் கையளிப்பு
வெலிசறை கடற்படை முகாமில் அமைந்துள்ள கடற்கரையோர காவல் படகுகளை தயாரிக்கும் தளத்தில் (Inshore Patrol Craft Construction Project) தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு படகுகள் சீஷேல் நாட்டுக்கு வழங்கும் நிகழ்வு இன்று (பெப்ரவரி 01) கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் இடம்பெற்றது.
Tamil