--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன  பாதுகாப்பு செயலாளராக கடமை ஏற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன  2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி பாதுகாப்புச் செயலாளராக தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படை பொலிஸாருடன் இணைந்து கூட்டு நடவடிக்கையில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படை கட்டளையக வீரர்கள் மன்னார் பொலிஸ் பிரிவுடன் இணைந்து நேற்று  மன்னார், கரிசல் பகுதியில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் 49 கிராம் மற்றும் 490 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள்,  02 கிராம் மற்றும் 440 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி. ராஸியா பெண்ஸே பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்னவை இன்று (நவம்பர், 19) சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாம் நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் - ஜனாதிபதி

மக்கள் என்னிடம் முன்வைத்த முக்கிய வேண்டுகோள் ‘நாட்டை காப்பாற்றுங்கள்’ என்பதாகும். இந்த குறுகிய காலத்தில் மக்கள் கோரியபடி நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின்போது ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனைவருக்கும் ஆசி வேண்டி சுதந்திர சதுக்கத்தில் 21 நாட்கள் பிரித் பாராயணம்

அனைவருக்கும் ஆசி வேண்டி நடத்தப்பட்ட பிரித் பாராயண ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டார்.  கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று (18) மாலை ஆரம்பமான இந்த பிரித் பாராயணம்  தொடர்ச்சியாக  21 நாட்கள் இடம்பெறவுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு இராணுவத்தின் புதிய படைப் பிரிவு ஆரம்பம்

மூன்று படையணிகளை உள்ளடக்கிய இலங்கை இராணுவ பொறியியலாளர்களின் பல் திறன் மற்றும் பன்முகத் திறன் கொண்ட புதிய முதலாவது இராணுவ பொறியியலாளர் பிரிவு  நேற்றைய தினம் ஸ்தாபிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 327 பேர் நேற்று அடையாளங் காணப்பட்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 327 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அவர்களின் மொத்த எண்ணிக்கை 18, 402 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை விமானப்படையினரால் விஷேட சமூக சேவைகள் திட்டம் முன்னெடுப்பு

தென்சூடான் நகரில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை விமானப்படை வீரர்களினால் அகொபோ நகரிலுள்ள குழந்தைகள் அனாதை இல்லத்தில் விஷேட சமூக சேவைகள் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஆசி வேண்டி நாரஹென்பிட்ட  அபயராமய விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சமய நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன கலந்து கொண்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இன்று உரை

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

8,743 பீசிஆர் பரிசோதனைகள் நோற்று முன்னெடுப்பு

நாட்டில் 8,743 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாகவும் இதில் வைரஸ் தொற்றுக்குள்ளான 401 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் பல பாகங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி -வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிழக்குப் பிராந்தியத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கண்றுகள் படையினரால் நடுகை

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் ஒரே நாளில்  மரக்கன்றுக்கள் நடும் மாபெரும் திட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய கிழக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளில் ஒரே நாளில் 100,000 அரிய வகை மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்காக தென் சூடான் பயணமாகும் படைக் குழுவினர் இராணுவத் தளபதியினால் வழியனுப்பி வைப்பு

ஐக்கிய நாடுகள்  அமைதிகாக்கும் பணிகளுக்காக தென் சூடான் பயணமாகும் 7வது படைக் குழுவினர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா வழியனுப்பி வைத்தார். கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தவர் அமைதிகாக்கும் பணிகளுக்காக செல்ல உள்ள படைக்குழுவினரை சம்பிரதாய பூர்வமாக வழியனுப்பி வைத்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,806 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  11,806  அதிகரித்துள்ளதாகவும் வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின எண்ணிக்கை 17674 ஆக பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு  விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சீனக் குடாவில் இடம்பெற்ற விமானப்படையின் அணிவகுப்பில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு

சீனக்குடாவில் உள்ள விமானப்படை அகடமியில் கலா சாலையில்  இன்று காலை நடைபெற்ற இலங்கை விமானப்படையின் அதிகாரிகளின் பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன  கலந்து கொண்டார்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

உலக போர் வீரர்கள் ஞாபகார்த்த 'பொப்பி மலர் தினம்'

இலங்கை இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற போர்வீரர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  உலக போர் வீரர்கள் ஞாபகார்த்த  'பொப்பி மலர் தினம்' நேற்று கொழும்பு விகார மகா தேவி பூங்காவில் உள்ள நினைவுத் தூபியில் இடம் பெற்றது.