பாதுகாப்பு செய்திகள்
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு அன்ஜு'வின் உதவியாளர் பொலிஸாரினால் கைது
பிரபல பாதாள உலககுற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'குடு அன்ஜு'வின் உதவியாளர் கொழும்பு பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டார்.
வெலிகட சிறைச்சாலைக்கு ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பூனை சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினரால் பிடிக்கப்பட்டது
ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் சிம் அட்டைகளை வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பூனை ஒன்று சிறைச்சாலை அதிகாரிகளினால் நேற்றைய தினம் பிடிக்கப்பட்டது.
சமூக ஐக்கியத்தை மேலும் வளர்த்துக்கொள்வதற்கு ஹஜ் பெருநாள் வழிவகுக்கும் - ஜனாதிபதி
இறைவனுடனான நெருக்கத்தையும் சமூக ஐக்கியத்தையும் மேலும் வளர்த்துக்கொள்வதற்கு இந்த நன்னாள் உதவும் என்று எண்ணுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள ஹஜ் பெருநாள்
வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதன் மூலம் அச்சுறுத்தல்களை முறியடிக்கும் - பாதுகாப்பு செயலாளர்
இயற்கை அனர்த்தங்களை கட்டுப்படுத்துவது ஒரு கடினமான காரியம் என்றபோதிலும், சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதன் மூலம் மனிதனால் உருவாக்கப்படும் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
சீனா, இலங்கையின் வரலாற்று காலம் முதலான நட்பு அணியாகும் - பாதுகாப்பு செயலாளர்
அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட சீனாவிற்கும் இலங்கைக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவு, மேலும் வலுவடைந்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
பூச மற்றும் கல்பிட்டிய கடற்படை தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 21 பேர் வீடு திரும்பினர்
பூச மற்றும் கல்பிட்டிய கடற்படை தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 21 பேர் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தம்ரோ நிறுவனம் தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு ஒரு மில்லியன் ரூபா அன்பளிப்பு
தம்ரோ நிறுவனம் ரூபா ஒரு மில்லியனை தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளது.
கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மஞ்சள் கடற்படையினர் வசம்
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
களுத்துறை பகுதி சுற்றிவளைப்பின் போது பொலிஸார் எதனோல் ரக போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு
தெற்கு களுத்துறை மகாஹீனிடிங்கள பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 4,000 லீட்டர் எதனோல் ரக சட்டவிரோத போதைபொருட்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (ஜூலை 29) கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை பிரஜைகளை மீள அழைக்கும் பணிகள் ஆரம்பம்
வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்ப எதிர்பார்த்திருக்கும் இலங்கை பிரஜைகளை நாட்டிற்கு மீள அழைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய, ஜூலை 31, ஆகஸ்ட் 01ஆம் திகதிகளில் டுபாய் மற்றும் அபுதாபி நாடுகளில் இருந்து 275 பேர் கொண்ட இரண்டு குழுக்களை உள்ளடக்கிய இலங்கைப் பிரஜைகளுடன் இரு விமானங்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் அட்மிரல் (ஒய்வு) ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் குற்றங்களுக்காக கலால் திணைக்கள சார்ஜென்ட் ஒருவரும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் கைது
பமுனுகம பகுதியில் தனியார் கம்பனி ஒன்றின் எதனோலினை கொண்டு சென்ற கலால் திணைக்களத்தில் சேவையாற்றும் சார்ஜென்ட் ஒருவர் பொலிஸாரினால் நேற்று (ஜூலை 28) கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானப்படையினரின் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 165 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு.
வன்னியில் இலங்கை விமானப்படையினரால் முகாமைத்துவம் செய்யப்படும் தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட165 பேர் இன்று காலை (ஜூலை, 29) வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.