பாதுகாப்பு செய்திகள்
எம்ரீ நியூ டயமண்ட் கப்பலில் தீப்பிழம்புகளோ அல்லது புகையோ ஏற்படவில்லை - கடற்படை தெரிவிப்பு
நிர்கதிக்குள்ளாகியுள்ள எம்ரீ நியூ டயமண்ட் கப்பலிலிருந்து இன்று (09) எதுவித தீப்பிழம்புகளோ அல்லது புகையோ அவதானிக்கப்படவில்லை இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
எம்ரீ நியூ டயமண்ட கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை அணைக்க விமான மற்றும் கடற்படையினர் தீவிர போராட்டம்
தற்போதுள்ள காற்றுடன் கூடிய வானிலை மற்றும் தொடர் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் உலர் இரசாயன கலவைகளை வீசுவதன் மூலம் எம்ரீ நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ, ஏனைய பகுதிகளுக்குப் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
10 கிலோ தங்கத்தை கடத்தும் முயற்சி விசேட அதிரடிப்படையினரால் முறியடிப்பு
புத்தளத்தில் 10 கிலோ கிராம் எடையுடைய தங்கத்தை கடத்த மேற்கொண்ட முயற்சி விசேட அதிரடிப்படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. கார் ஒன்றின் மூலம் கொண்டு செல்லப்படவிருந்த குறித்த தங்கத்தை அதிரடி படையினர் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடல் காற்று கப்பலில் தீப்பிழம்புகளைத் தூண்டுகிறது - கடற்படை
எம்ரீ நியூ டயமண்ட கப்பலில் ஏற்பட்டுள்ள தீ கடலில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக அதிகரித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
ஐந்து மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'பாதாளயோ' மற்றும் ' கோட்டாபய' புத்தகத்தின் ஆங்கில பதிப்பு ஜனாதிபதியிடம் கையளிப்பு
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் 59வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரினால் எழுதப்பட்ட 'கோட்டாபய' என்னும் சிங்கள புத்தகத்தின் ஆங்கில பதிப்பும், பாதாள உலக செயற்பாடுகளின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சிங்கள நாவல் வடிவிலான 'பாத்தாளயோ' எனும் நாவலும் வெளியிட்டு வைக்கப்பட்டன.
815 கிலோ உலர்ந்த மஞ்சள் கடத்தல் முயற்சி கடற்படையினரால் முறியடிப்பு
கற்பிட்டி, எத்தளை பிரதேசத்தில் இன்று (06) 815 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை சட்டவிரோதமாக கொண்டு செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி கடற்படையினரால் முறியடிக்கப்பட்டது.
எம்ரீ நிவ் டயமண்ட் கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை அணைப்பதற்கு அரசாங்கம் பிராந்திய நாடுகளின் உதவியை நாடுகிறது
எம்ரீ நிவ் டயமண்ட் கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை அணைப்பதற்கும் குறித்த கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு இடம்பெறுமானால் அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கும் அரசாங்கம் பிராந்திய நாடுகளின் உதவியை நாடியுள்ளது.
தீப்பரவல் ஏற்பட்டுள்ள எண்ணெய் கப்பலின் கெப்டன் மற்றும் காயமடைந்தவர்களும் இலங்கை கடற்படையினரால் மீட்பு
சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் எண்ணெய் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக காயமடைந்த மூன்றவது பொறியியலாளரும் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
தீப்பற்றிய எண்ணெய் தாங்கியை மீட்கும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினர்
சற்றுமுன்னர் சங்கமன்கந்த துறைமுகத்திலிருந்து 38 கடல் மைல்களுக்கு அப்பால் தீப்பற்றி கொண்ட வெளிநாட்டு எண்ணெய் தாங்கி ஒன்றை மீட்பதற்காக கடற்படையின் இரண்டு கப்பல்கள் மற்றும் அதிவேக தாக்குதல் படகு என்பன ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
வளிமண்டலத்தில் நிலவுகின்ற தாழமுக்கம் காரணமாக நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீட்டர் வரை அதிகரித்த வேகத்தில் காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மழைவீழ்ச்சியும் சற்று அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் பொதுமக்கள் இது தொடர்பாக அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொலிஸ் விரைவில் மறுசீரமைக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ
முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையினை ஆய்வுக்குட்படுத்திய பின்னர் பொலிஸ் சேவை மறுசீரமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என உள்ளக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹெல ரணவிரு பலமுளுவவிற்கு நன்கொடையாளர் ஒருவரினால் 100,000 ரூபா அன்பளிப்பு
பொரெல்ல பகுதியில் வசிக்கும் வியாபாரியான யூ எச் அசோக எனும் நன்கொடையாளர் 100,000 ரூபா காசோலையினை போர் வீரர்களின் நலன்புரி சேவைகளுக்காக ஹெல ரணவிரு பலமுளுவ அமைப்பிற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
தனிப்பட்ட விழாக்களுக்கு தன்னை அழைப்பதனைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி பொதுமக்களிடம் வேண்டுகோள்
தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்கே தனக்கான நேரம் போதுமானதாக இருப்பதன் காரணமாக திருமணங்கள், விழாக்கள், பரிசு வழங்கும் நிகழ்வுகள், திறப்பு விழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கு தனக்கு அழைப்பு விடுப்பதை தவிர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள், பாதாள உலக மற்றும் போதைப்பொருள் அச்சுருத்தல்கைளை அரசு முடிவுக்கு கொண்டுவரும் - பாதுகாப்புச் செயலாளர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைதியையும் சுபீட்சத்தையும் கொண்டுவருவதற்காக நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாது ஒழித்த அதே உத்வேகத்துடன் சமூக விரோத செயல்களையும் அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.






