பாதுகாப்பு செய்திகள்
இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சஞ்ஜய வனசிங்க
இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சஞ்ஜய வனசிங்க இன்று (ஜூலை 15) நியமிக்கப்பட்டுள்ளார்.
விடைபெற்றுச் செல்லும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகராக கடமையாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள, திரு.வினோத் குரியன் ஜேக்கப் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேலும் ஊக்குவிக்கும்
கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2023
இந்து சமுத்திர பிராந்தியத்தில் விரிவான மற்றும் ஒன்றோடொன்று இணைந்த பாதுகாப்பு கட்டமைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட முத்தரப்பு 7வது கொழும்பு பாதுகாப்பு மாநாடு நேற்று (12 ஜூலை 2023) இடம்பெற்றது.
இராணுவத்தினரால் வவுனியா வர்த்தகர்களின் தலைமையக கட்டிடம் நிர்மாணிப்பு
பொதுமக்களுடனான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கான ஒரு வேண்டுகோளின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் காலாட் படையினர்களினால் வவுனியா வர்த்தகர் சங்கத்தின் இரண்டு மாடி நிர்வாக கட்டிடத்தொகுதி அண்மையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ரா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (11) பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை தளபதி நியமனம்
இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனதிபதியும் ஆயுதப்படை பிரிவின் சேனாதிபதியுமான அதிமேதகு .ரணில் விக்ரமசிங்க அவர்களின் அனுமதியுடன் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களினால் புதிய விமானப்படை தலைமை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன அவர்களுக்கு கடந்த 2023 ஜூலை 09ம் திகதி நியமன கடிதம் கையளிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான பேருந்தின் மீட்பு பணிகளில் படையினர்
12 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படையினர் நேற்று (9) மாலை 7.30 மணியளவில் கொட்டாலிய ஓயவில் விபத்துக்குள்ளான பயணிகள் பேருந்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
புதிய விமானப்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவை சந்தித்தார்.
சட்டவிரோத மனிதக் குடிபெயர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடுமையான சட்டம் –
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்
இந்து சமுத்திரத்தின் ஊடாக இடம்பெறும் சட்டவிரோத மனிதக் குடிபெயர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடுமையான சட்டம் முன்னெடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
புதிய விமானப்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை மாரியாதை நிமித்தம் இன்று (ஜூலை 06) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.
பாகிஸ்தானிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
கொழும்பில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயதில் பாதுகாப்பு ஆலோசகராக கடையாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள கேர்ணல் முஹம்மட் சப்தர் கான், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
ஆட்கடத்தல் தடுப்பு தொடர்பான முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி நிகழ்வு வெற்றிகரமாக முடிவுற்றது
முப்படை அதிகாரிகளுக்காக ஆட்கடத்தல் தடுப்பு தொடர்பான இரண்டு நாள் கொண்ட நிகழ்வு ஜூலை 04ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை கொழும்பு Movenpick ஹோட்டலில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்யும்
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரால் முல்லைத்தீவைச் சேர்ந்த வறிய குடும்பத்திற்கு வீடு நிர்மாணிப்பு
முல்லைத்தீவு வள்ளுவர்புரத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று அண்மையில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வின் போது தகுதியான குடும்பம் ஒன்றிற்கு வழங்கி வைக்கப்பட்டது.
விமானப் படைத் தளபதி பதவியேற்றார்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை விமானப்படை (SLAF) தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் ஜூலை 01 ஆம் திகதி விமானப்படைத் தளபதியாக பதவியேற்றார்.
பருத்தித்துறை கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தில்
இராணுவப் படையினர் இணைந்தனர்
இலங்கை இராணுவ (SLA) துருப்புக்கள் பருத்தித்துறை பிரதேச மக்களுடன் இணைந்து சத்கோட்டை மற்றும் ஊறணி கடற்கரைப் பகுதியை அண்மையில் சுத்தப்படுத்தினர்.
5வது படைக்குழு அமைதி காக்கும் பணிக்காக மாலிக்கு
மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் மினுஸ்மா பணிகளில் பணியாற்றுவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 5 வது இலங்கை அமைதிகாக்கும் படைக்குழுவில் 243 இராணுவ வீரர்களில் 170 போர் கொண்ட குழு முதல் கட்டமாக சனிக்கிழமை (ஜூலை 01) மாலை மாலிக்கு புறப்பட்டு சென்றனர்.
இலங்கை விமானப்படை தளபதிக்கு பதவி உயர்வு
இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களுக்கு "எயார் சீப் மார்ஷல் " எனும் பதவி உயர்வு 2023 ஜூன் 29ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ள இலங்கை விமானப்படை தளபதி இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்
தனது சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ள இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை வழியனுப்பு வைக்கும் முகமாக இலங்கையின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கௌரவ.பிரமீத பண்டார தென்னக்கூன் அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 2023 ஜூன் 26ம் திகதி அமைச்சராகத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
இலங்கை விமானப்படையில் 38 வருட சேவையை நிறைவு செய்த விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பத்திரனவின் ஓய்வு நாளை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற நினைவு நிகழ்வில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மூன்று தசாப்தங்களாக நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து மனிதாபிமான நடவடிக்கைக்கு விமானப்படைக்கு தலைமை தாங்கி, நாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்புவதில் எயார் மார்ஷல் பத்திரன சிறப்பாக செயற்பட்டார் என்று மேலும் தெரிவித்தார்.