பாதுகாப்பு செய்திகள்
10 வது Damso சர்வதேச செஸ் விளையாட்டு போடியில் இராணுவ வீரர்கள் சாம்பியன்
இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து 500 இற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட 10 வது Damso சர்வதேச செஸ் சம்பியன்ஷிப் போட்டியில், அரச மற்றும் வர்த்தக சேவை அணி பிரிவில் இலங்கை இராணுவ அணி அண்மையில் சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
நாட்டிற்குள் வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான தெற்காசிய வலையமைப்பின் பங்குதாரர்களுடனான செயலமர்வு
வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான தெற்காசிய வலையமைப்பின் பங்குதாரர்களுடனான செயலமர்வு அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
மட்டக்களப்பில் இராணுவம் பயன்படுத்திய காணிகள் பொதுமக்களுக்கு விடுவிப்பு
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்க, மட்டக்களப்பு, சித்தாண்டியில் 4 வது கெமுனு ஹேவா படையணியினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 8.6 ஏக்கர் காணியை செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) கிழக்குப் பாதுகாப்புப்படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களால் விடுவிக்கப்பட்டது.
போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தால் நடத்தப்பட்ட கப்பல்களுக்கு அணுகல், தேடுதல் மற்றும் கைப்பற்றல் நுட்பங்கள் பற்றிய பிராந்திய பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவடைந்தது
போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தினால் திருகோணமலை, விசேட படகுகள் படையணி தலைமையகத்தில் மற்றும் சோபர் தீவில் நடத்தப்பட்ட கப்பல்களுக்கு நுழைவு, தேடுதல் மற்றும் கைப்பற்றும் நுட்பங்கள் தொடர்பான பிராந்திய பயிற்சி நெறி வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன் அதன் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு 2023 ஜூன் 09 ஆம் திகதி விசேட படகுகள் படையணியின் நிர்வாக அதிகாரி கமாண்டர் பிசிபிஏ லியனகே தலைமையில் திருகோணமலை மலிமா சோபர் தீவு உணவகத்தில் நடைபெற்றது.
இலங்கை மற்றும் சுவிஸ்லாந்துக்கு இடையிலான இராணுவ
ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கப்படும்
இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் பிராங்கோயிஸ் கரோக்ஸ் அவர்கள் இன்று (ஜூன் 09) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இலங்கையில் கடல்சார் பயிற்சிக் கல்லூரி அமைப்பது குறித்து பிரான்ஸ் தூதுவருடன் இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடல்
இலங்கைக்கான பிரான்ஸ் குடியரசின் தூதுவர் அதிமேதகு ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கெளரவ பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தார்.
இலங்கையின் பாதுகாப்புப் படைகளை அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுடன் மேம்படுத்துவது இன்றியமையாதது - இராஜாங்க அமைச்சர் தென்னகோன்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிறந்த இருதரப்பு உறவுகளினால், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு பல ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினரால் நெடுந்தீவு படகு நுழைவாயிலில்
விபத்துக்குள்ளான படகில் இருந்து 38 பேர் மீட்பு
யாழ்ப்பாணம் நெடுந்தீவு நுழைவாயிக்கு அருகில் விபத்துக்குள்ளான படகொன்றில் இருந்த 38 பேர் கொண்ட ஒரு குழுவை இலங்கை கடற்படையினர் புதன்கிழமை (ஜூன் 07) காலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில்
மூலோபாய மதிப்பீட்டிற்கான மையம் நிறுவப்பட்டது
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பீடம் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆளுமைக்கான நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மூலோபாய மதிப்பீட்டு மையமொன்றினை செவ்வாய்கிழமை (ஜூன் 06, 2023) ஆரம்பித்துள்ளது.
மருத்துவ ரீதியாக ஓய்வு பெற்ற மற்றும் இறந்த போர் வீரர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் திருத்தப்பட்ட ஆயுதப் படைகளின் உணவு (ரேஷன்) கொடுப்பனவுகள் வழங்கப்படும்
பயங்கரவாதச் செயல்களால் ஊனமடைந்து தற்போது மருத்துவ காரணங்களால் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் போரின் போது உயிரிழந்த போர் வீரர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் திருத்தியமைக்கப்பட்ட ஆயுதப் படைகளின் உணவு கொடுப்பனவுகளை வழங்க தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதுடன் உரிய காலத்தில் அவர்களுக்காண கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
பருவ மழை தொடங்கும் நிலையில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
நாடு பூராகவும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாலும், மழைவீழ்ச்சி அதிகரிப்பதாலும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பதுளை, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இராணுவத்தினரால் நெற்பயிர் சாகுபடி செய்யும் பகுதிகளில் ட்ரோன் தொழில்நுட்ப முறை பயன்படுத்தல்
மிக நவீன மற்றும் விஞ்ஞான நடைமுறைகளை கடைப்பிடித்து, இலங்கை இராணுவம் முதன்முறையாக வெள்ளிக்கிழமை (ஜூன் 02) காலை ஜயவர்தனபுர இலங்கை இராணுவ தலைமையக வளாகத்தை சுற்றியுள்ள 8.5 ஏக்கர் பரப்பளவில் இராணுவ நெற் பயிர்ச்செய்கைகளுக்கு கிருமி நாசிகள் மற்றும் களை நாசிகளை தெளிப்பதற்கு சோதனை அடிப்படையில் ஆளில்லா விமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது.
இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு
புதுடில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அவிஹேய் சப்ரானி அவர்கள் இன்று (ஜூன் 05) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
தென் - மேற்கு பருவமழை ஆரம்பமாகும் வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புகளின்படி, நாடு முழுவதும் தென் - மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக எதிர்வுகூறியுள்ளது.
‘சந்தஹிரு சேயா அறக்கட்டளை’ யினால் அனுராதபுர வைத்தியசாலைக்கு
சிறுநீரக சுத்திகரிப்பு (டயலிசிஸ்) இயந்திரம் அன்பளிப்பு
இவ் வைத்தியசாலையானது நாட்டின் யுத்தத்தின் போது படுகாயமடைந்த இராணுவத்தினருக்கு அவசர சிகிச்சைக்காக உன்னத சேவையை வழங்கியதாகவும், இவ் வைத்தியசாலையில் இரண்டு தடவைகள் தான் சிகிச்சை பெற்றதையும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இதன் போது நினைவு கூர்ந்து குறிப்பிட்டார்.
சந்தஹிரு சேயாவில் இடம்பெற்ற பக்தி கீதையின் போது நாட்டின் இராணுவ வீரர்களுக்கு அதியுயர் அஞ்சலி செலுத்தப்பட்டது
தேசத்தின் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக விசேட 'பொசோன் பக்தி பாடல்' நிகழ்வு நேற்று (ஜூன் 03) மாலை சந்தஹிரு சேயா வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பொசன் வாழ்த்துச் செய்தி
இலங்கை வரலாற்றில் மஹிந்த தேரரின் வருகை, சமய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல் என்பது மறுக்க முடியாதது. மேலும், அதன் மூலம் நாம் எண்ணற்ற சமூக, கலாசார மற்றும் அரசியல் மதிப்புகளை பெற்றுள்ளோம்.
கிளிநொச்சி மாணவர்களுக்கு இராணுவத்தினரால் கரப்பந்தாட்ட பயிற்சி
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் இலங்கை இராணுவத்தின் 57 ஆவது காலாட்படைப் பிரிவு கிளிநொச்சி பிரதேச மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் அண்மையில் கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தில் கரப்பந்தாட்டப் பயிற்சிப் பட்டறையொன்றை நடத்தியது.