ஜனாதிபதி செய்தி
சிறுநீரக நோய்த்தடுப்பு மற்றும் நோயாளிகளின் நலன்பேணலுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் ஜனாதிபதியினால் பொதுமக்களிடம் கையளிப்பு
சிறுநீரக நோய்த்தடுப்பு மற்றும் நோயாளிகளின் நலன்பேணலுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (29) முற்பகல் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் தமது முயற்சியினால் வெற்றிகளாக மாற்றிக்கொள்ளும் மானிட சமூகம் அவ்வெற்றியையும் அதனால் கிடைக்கப்பெறும் மன மகிழ்ச்சி, சுதந்திரம் ஆகியவற்றை பல வழிகளில் கொண்டாடுவது உலக வழக்காக இருந்து வருகின்றது.
புதிய ஜப்பானிய பேரரசரின் முடிசூட்டு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு
ஜப்பான் நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழா 180 க்கும் மேற்பட்ட நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில் இன்று (22) டோக்கியோ நகரின் இம்பீரியல் மாளிகையில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
ஜப்பானிய பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி ஜப்பான் பயணம்
ஜப்பானிய பேரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (21) முற்பகல் ஜப்பான் பயணமானார்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்க ஜனாதிபதி பணிப்புரை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்குவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.
விஷேட அதிரடிப்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
விஷேட அதிரடிப்படை பயிற்சிப் பாடசாலையில் 76வது அடிப்படை பயிற்சிநெறி பூர்த்தி செய்து வெளியேறும் விஷேட அதிரடிப்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வு இன்று (ஒக்டோபர், 05) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இலங்கையின் நல்லிணக்க வேலைத்திட்டங்களுக்கு பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் பாராட்டு
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலினால் ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியில் நல்லிணக்க செயற்பாடுகளை வலுவூட்டுவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களை பொதுநலவாய நாடுகள், ஐக்கிய நாடுகள் மற்றும் தெற்காசியா தொடர்பிலான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் விம்பிள்டன் பிரபு தரிக் அஹமட் (Lord Tariq Ahmed of wimblendon) பாராட்டினார்.
முதலாவது பொபி மலர் ஜனாதிபதிக்கு அணிவிப்பு
பொபி மலர் தினத்தை முன்னிட்டு முதலாவது பொபி மலரை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவித்தல் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் சிறுவர் தின செய்தி
ஒரு நாட்டின் நலனும் அபிவிருத்தியும் அபிமானமும் நிகழ்கால சிறார்களாகிய வளர்ந்துவரும் எதிர்கால சந்ததியினரின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது.
ஜனாதிபதியின் தலையீட்டில் அங்கவீனமுற்ற இராணுவத்தினர் உயிரோடுள்ள வரை சம்பளம்
யுத்த சூழ்நிலை காரணமாக அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் உயிரோடுள்ள வரை சம்பளம் வழங்க பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
போதைப்பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களை கண்டறிவதற்கான அதிநவீன உபகரணங்கள் சீனாவினால் இலங்கைக்கு அன்பளிப்பு…..
750 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க, போதைப்பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களை கண்டறிவதற்கான அதிநவீன உபகரணங்களை சீனா அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளதுடன், அவற்றை சீன தூதுவர் Chang Xueyuan இன்று (27) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
“தாமரைக் கோபுரம்” ஜனாதிபதியினால் கோலாகலமாக திறந்து வைப்பு
நாட்டின் நவீன வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையாகவும், தெற்காசியாவின் அதி உயர்ந்த தொலைத் தொடர்பு கோபுரமாகவும் திகழும் “தாமரைக் கோபுரம்” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இன்றுமாலை (செப்டம்பர், 16) இடம்பெற்ற நிகழ்வின்போது உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தாமரைத் தடாக அரங்கில் அரங்கேற்றம்
இசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களினால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இசை நிகழ்ச்சியான 'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தாமரைத் தடாக அரங்கில் இன்று மாலை (செப்டம்பர், 14) அரங்கேற்றம் பெற்றது.
பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்ட திருத்தங்களையும் புதிய சட்டம் வகுத்தலையும் துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை
பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்ட திருத்தங்களையும் புதிய சட்டங்கள் வகுப்பதையும் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலின்றி வடக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மேலும் வடக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் உரிய துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” செயற்திட்டத்தின் கீழ் நெடுந்தீவில் பல்வேறு விசேட நிகழ்ச்சித்திட்டங்கள்
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய நிகழ்ச்சித்திட்டம் தற்போது யாழ் மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெறுவதுடன், அதனுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நேற்றைய (27) தினம் நெடுந்தீவில் இடம்பெற்றது.
வெடிபொருட்கள், கதிர்வீசல் மற்றும் இரசாயன பொருட்களை கண்டறிவதற்கான ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட விசேட உபகரணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
ரஷ்ய விஞ்ஞானியினால் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள், கதிர்வீசல் மற்றும் இரசாயன பொருட்களை கண்டறிவதற்கான விசேட உபகரணமொன்றினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (27) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இன்டர்போல் பொதுச் செயலாளர் ஜனாதிபதியை சந்தித்தார்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தல் உள்ளிட்ட அந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் குறித்து இன்டர்போலின் பொதுச் செயலாளர் ஜேர்கென் ஸ்டோக் (Jurgen Stock) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் முப்படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கும் இலங்கை பொலிஸாருக்கும் தமது பாராட்டுக்களை தெரிவித்தார்
இலங்கை கடற்படையின் புதிய கப்பல் “பராக்கிரமபாகு” ஜனாதிபதியால் அதிகாரமளிப்பு
இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல், முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் இருந்து தனக்கான ஆணையதிகாரத்தினை பெற்றுக்கொள்ளும் நிகழ்வு இன்று (ஆகஸ்ட், 22) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.
வெடிபொருட்களை விநியோகிப்பதில் பொருத்தமான முறைமையொன்றை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
வெடிபொருட்களை விநியோகிக்கும்போது இடம்பெறும் முறைகேடுகளை குறைத்து உரிய முறையில் வெடிபொருட்களை விநியோகிக்கும் முறைமையொன்றை உருவாக்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடுகள் உலகிற்கே முன்னுதாரணமாகும். – யசுஷி அகாஷி
கொடிய பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, நாட்டில் இனங்களுக்கிடையிலான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட இலங்கையால் முடிந்துள்ளமை உலகின் ஏனைய நாடுகளுக்கு சிறந்த படிப்பினையாகுமென இலங்கைக்கான முன்னாள் ஜப்பான் விசேட பிரதிநிதி யசுஷி அகாஷி தெரிவித்தார்.
இரண்டு இராணுவ வீரர்களுக்கு வீரோதார விபூஷன விருது
இரண்டு இராணுவ வீரர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வீரோதார விபூஷன விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மரணத்தின் விளிம்பில் உள்ளவர்களின் உயிரைக் காக்கும் நடவடிக்கையில் அல்லது பாதுகாப்பு்...
பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரச சேவையாளர்களும் சிறந்த மன நிறைவுடன் சேவையில் ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் - ஜனாதிபதி
பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரச சேவையாளர்களும் சிறந்த மன நிறைவுடன் சேவையில் ஈடுபடுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
ஹஜ் என்ற சொல் ஒரு புனித பூமியை நோக்கிய யாத்திரையையே குறிக்கின்றது உலக வாழ் இஸ்லாமியர்கள் ஐக்கியத்துடனும் சகோதரத்துவத்துடனும் பங்குபற்றும் ஒரு பாரிய மத வழிபாடாகவே அவர்களது ஹஜ் யாத்திரை அமைகின்றது.
ஜனாதிபதி கம்போடியா பிரதமரை சந்தித்தார்
கம்போடியா நாட்டிற்கான அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் கம்போடிய பிரதமர் Samdech Akka Moha Sena Pakdei Techo HUN SEN அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) பிற்பகல் இடம்பெற்றது.