செய்தி வெளியீடு
அமெரிக்காவினால் 2021.07.06 அன்று விடுக்கப்பட்ட இலங்கைக்கான பயண எச்சரிக்கை தொடர்பான ஊடக அறிக்கை
2021 மே, 24ம் திகதி இலங்கைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையினால் பிறப்பிக்கப்பட்டிருந்த 4ம் நிலை பயண எச்சரிக்கை ஜூலை, 06ம் திகதி முதல் 3ம் நிலை பயண எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது.
15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டமை தொடர்பான ஊடக அறிக்கை
15வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர், பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கமைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
திஸ்ஸமகாராமவில் சீன தனியார் நிறுவன தொழிலாளர்கள், இராணுவத்தினர் பயன்படுத்தும் உருமறைப்பு சீருடையை ஒத்த ஆடையை அணிந்த சம்பவம் தொடர்பான ஊடக அறிக்கை
திஸ்ஸமகாராம, திஸ்ஸவெவ வாவியில் மண் அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள சீன தனியார் நிறுவன தொழிலாளர்கள், இராணுவத்தினர் பயன்படுத்தும் உருமறைப்பு சீருடையை ஒத்த ஆடையை அணிந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களினால் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பான இலங்கையின் அவதானிப்புக்கள்
2021 ஜூன் 10ஆந் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமைக்கு வெளிநாட்டு அமைச்சு வருத்தம் தெரிவிக்கின்றது. 'இலங்கையில் நிலைமை, குறிப்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்' என்ற தலைப்பிலான இந்தத் தீர்மானமானது உண்மைக்கு மாறான கருத்துக்களைக் கொண்டிருப்பதுடன், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியில் இலங்கை மேற்கொண்டுள்ள பன்முக முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தவில்லை.
தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 'போர்க் கருவியாக இலங்கை சிறுவர்கள்' எனும் கலந்துரையாடல்
'போர்க் கருவியாக இலங்கை சிறுவர்கள்' எனும் தலைப்பில், தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்று வெளிவிவகார அமைச்சில் அண்மையில் இடம்பெற்றது.
ஒய்வுதியம் தொடர்பில் அங்கவீனமுற்ற படைவீரர்களினால் நடாத்தப்பட்ட ஊடக மாநாடு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை
ஒய்வுதியம் தொடர்பில் அங்கவீனமுற்ற படைவீரர்களினால் நடாத்தப்பட்ட ஊடக மாநாடு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை :
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து ஒன்றிணைந்த விஷேட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன பொலிஸ் மா அதிபர் சி. டி விக்ரமரட்ணவுக்கு இன்று (01,டிசம்பர்) பணிப்புரை வழங்கியுள்ளார்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து ஒன்றிணைந்த விஷேட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன பொலிஸ் மா அதிபர் சி. டி விக்ரமரட்ணவுக்கு இன்று (01,டிசம்பர்) பணிப்புரை வழங்கியுள்ளார்.
மஹர சிறைச்சாலையில் நேற்று 2020 நவம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற பதற்ற நிலைமை தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன பொலிஸ் மா அதிபர் சி. டி விக்ரமரட்ணவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
மஹர சிறைச்சாலையில் நேற்று 2020 நவம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற பதற்ற நிலைமை தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன பொலிஸ் மா அதிபர் சி. டி விக்ரமரட்ணவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 4வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம்
இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் இலங்கையின் தலைமையில் இடம்பெற்றது. கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முதலாவது சந்திப்புக் கூட்டம் 2011ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் இலங்கையில் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் முன் முயற்சியினால் இடம்பெற்றது. தொடர்ச்சியான முறையில் வெற்றிகரமாக இடம்பெற்று வந்த இந்த கூட்டம், இறுதியாக ஆறு வருடங்களுக்கு முன் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவின் புதுடில்லி நகரில் நடைபெற்றது.
இலங்கையின் ஏற்பாட்டில் இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுகிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4 வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு மாநாடு 2020, நவம்பர் 27-28 திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் ஏற்பாட்டில் இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுகிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4 வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு மாநாடு 2020, நவம்பர் 27-28 திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது.
காடழிப்பைக் கட்டுப்படுத்த விமானப்படையினரால் வான்வழி கண்காணிப்பு - பாதுகாப்பு செயலாளர்
சட்டவிரோத காடழிப்பு பெருமளவில் பரவாலாக இடம்பெற்று வருவது தொடர்பாக கவலை வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுவதற்கு முன்னரே அவற்றை அடையாளங் கண்டு காடழிப்பு இடம்பெறுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என தெரிவித்தார்.
இந்து சமுத்திரத்தில் இதுவரை இல்லாதவாறு இலங்கை பெரும் பங்கு வகிக்கும் - பாதுகாப்புச் செயலாளர்
கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு கடல்களையும் இணைக்கும் முக்கிய "கடல் வழி" தொடர்புகளை இந்து சமுத்திரமானது ஏழு கடல்களின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இந்து சமுத்திரத்தின் ஒரு கூறாக உள்ள இலங்கை, இந்து சமுத்திரத்தில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது என்பது வெளிப்படையான உண்மையாகும் என குறிப்பிட்டார்.