பாதுகாப்பு செய்திகள்
சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டோர் இராணுவத்தினரால் கைது
திருகோணமலை சிற்றாறு பிரதேசத்தில் அண்மையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 18 பேர் இராணுவத்தின் உதவியுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இராணுவத்தினரால் தியதலாவையில் சேதனப் பசளை உற்பத்தி ஆரம்பம்
தியதலாவையில் உள்ள 1வது பொது சேவைகள் படையினரால் சேதனப் பசளை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் இராணுவத்தின் பொது சேவைகள் படையணியின் கேர்ணல் நிலை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ஹந்துமுள்ளவின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.
கிளிநொச்சியில் தேவையுடைய மக்களுக்கு இராணுவத்தினரால் ஆறு வீடுகள் நிர்மாணிப்பு
பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதல்களுக்கமைய இலங்கை இராணுவம் கிளிநொச்சியில் தேவையுடைய மக்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 442 பேர் கடற்படையினரால் கைது
அண்மையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 152 மீன்பிடி படகுகள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களுடன் 442 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
கொவிட் தடுப்பு இயக்கத்திற்கான மருத்துவ சாதனங்களை தர்ம விஜய அறக்கட்டளை பரிசளிப்பு
அமெரிக்காவை தளமாகக் கொண்ட தர்ம விஜய அறக்கட்டளை மற்றும் பெளத்த விஹாரை ஆகியன இணைந்து கொவிட் -19 கட்டுப்பாட்டு பணிகளுக்காக இலங்கைக்கு நேற்று (ஜூலை 01) ஒரு தொகை மருத்துவ சாதனங்கள் மற்றும் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
மன்னாரில் 2000 கிலோவிற்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் படையினரால் கைப்பற்றப்பட்டது
மன்னார், அச்சங்குளம்,நறுவிலிக்குளம் மற்றும் சவுத் பார் பிரதேசங்களில் ஜூன் 29,30 மற்றும் ஜூலை 01ம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 2021.4 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஆறு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அம்பகமுவவில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கை இராணுவத்தினரால் அழிப்பு
அம்பகமுவ மற்றும் தனமல்வில பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு அவை பொலிஸாரின் மேற்பார்வை கீழ் அழிக்கப்பட்டன.
'நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி- 2021' கூட்டுப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு
இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டு கடற்படையினர் பங்கு கொண்ட "நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி- 2021" கூட்டுப் பயிற்சி நடைவடிக்கை நேற்றையதினம் (ஜூன் 30) வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
இந்திய கடலோர பாதுகாப்பு படை இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு உதிரி பாகங்கள் வழங்கி உதவி
இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் திரு வினோத் ஜேக்கப், இலங்கை கடலோர பாதுகாப்புப்படை பிராந்திய தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன் போது அவர் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான சுரக்ஷா கப்பலுக்கான உதிரிபாகங்களை உத்தியோக பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
சர்வதேச விளையாட்டுக்களில் கௌரவத்தை சேர்த்த இராணுவ விளையாட்டு வீரர்கள்
அண்மையில் நடைபெற்ற ‘76 வது செஸ் மியோர் நினைவு தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில்’ இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று இராணுவத்துக்கும், நாட்டுக்கும் கௌரவத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இராணுவம் வாகனங்களை பழுதுபார்ப்பதன் மூலம் நாட்டிற்கு மில்லியன் கணக்கான ரூபா சேமிப்பு
இராணுவத்தினரால் திருத்தி அமைக்கப்பட்ட 12 லேண்ட் ரோவர் ரக வாகனங்கள் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.
திஸ்ஸமகாராமவில் சீன தனியார் நிறுவன தொழிலாளர்கள், இராணுவத்தினர் பயன்படுத்தும் உருமறைப்பு சீருடையை ஒத்த ஆடையை அணிந்த சம்பவம் தொடர்பான ஊடக அறிக்கை
திஸ்ஸமகாராம, திஸ்ஸவெவ வாவியில் மண் அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள சீன தனியார் நிறுவன தொழிலாளர்கள், இராணுவத்தினர் பயன்படுத்தும் உருமறைப்பு சீருடையை ஒத்த ஆடையை அணிந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களினால் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.
கடற்படை கூட்டுப்பயிற்சியின் கடல் சார் பயிற்சிகள் திருகோணமலையில் ஆரம்பம்
இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கு கொள்ளும் நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டுப் பயிற்சி” நடைவடிக்கையின் இரண்டாவது கட்டம் திருகோணமலை கடற்பரப்பில் ஜூன் 26ம் திகதி ஆரம்பமானதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரால் 100 நோயாளிகளை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையம் பெலியத்தவில் ஸ்தாபிப்பு
பெலியத்த ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட் - 19 நோயாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது.
போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை’ முன்னிட்டு தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை ஏற்பாடு செய்த விசேட நிகழ்வு
'போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை’ முன்னிட்டு தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால்.
வவுனியா நகரம் இராணுவத்தினரால் கிருமி தொற்று நீக்கம்
கொவிட் - 19 பரவலை தடுக்கும் வகையில் இராணுவத்தினரால் வவுனியா பிரதேசத்தில் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.