பாதுகாப்பு செய்திகள்
புதிய விமானப் படைத்தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (நவம்பர், 04) சந்தித்தார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தினால் துரித அழைப்புக்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் மற்றும் வழங்கும் செயற்பாடுகளை ம
இலகுபடுத்துவதற்காக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தினால் துரித அழைப்புக்கான தொலைபேசி இலக்கங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
திருகோணமலைக் கடலில் மூழ்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளில் கடற்படையினர்
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் கடலுக்கடியில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் திட்டம் கடற்படையினரால் நேற்று (நவம்பர்,02) முன்னெடுக்கப்பட்டது.
அட்மிரல் பியால் டி சில்வா பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு) பியால் டி சில்வா பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவை இன்று (நவம்பர், 03) சந்தித்தார்.
கரையொதுங்கிய திமிங்கலங்கள் கடற்படை தலைமையிலான கூட்டு செயல்பாட்டில் மீண்டும் ஆழ்கடலுக்குள்
கடலோர பாதுகாப்புப்படை உயிர்காப்பு பிரிவு, பொலீஸ் உயிர்காப்பு பிரிவு, தன்னார்வ உயிர் காப்பாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பாணந்துறை கடற்கரையில் கரையொதுங்கிய திமிங்கலங்கள் மீண்டும் ஆழ்கடலுக்குள் கொண்டு சேர்க்கும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பல பொலிஸ் பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்
கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாதகம, மாவனல்லை, புலத்கொஹுபிட்டிய ஆகிய பொலிஸ் பிரதேசங்களும் கலிகமுவ பிரதேச சபை பிரதேசமும் குருணாகல் மாவட்டத்தில் கிரிஉல்ல பொலிஸ் பிரதேசமும் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இராணுவத்திற்கு டிஜிட்டல் உடல் வெப்பமானிகள்
மிரிசவெட்டிய ரஜமஹா விகாரையின் பிரதம விகாராதிபதி வண. ஈத்தல்வெட்டுனவெவ குணதிலக்க தேரரினால் வன்னி பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவிற்கு10 டிஜிட்டல் உடல் வெப்பமானிகளை பெற்றுக் கொடுக்க அனுசரனை வழங்கினார்.
மனிதாபிமான நடவடிக்கைகளில் ஓய்வு பெற்றுச் செல்லும் விமானப்படை தளபதியின் பங்களிப்பு அளப்பரியது - பாதுகாப்பு செயலாளர்
நாட்டில் மூன்று தசாப்த கால நீண்ட பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வருவதில் இலங்கை விமானப்படை பல வெற்றிகரமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு எயார் சீப் மார்ஷல் சுமங்கள டயஸின் பங்களிப்பு அளப்பரியது என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
மேலும் மினுவாங்கொடை கொத்தணியில் வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7, 582 ஆக பதிவாகிள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR 668 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த மூன்று இலங்கை பிரஜைகள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இம் மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி தீவிர சிகிச்சை வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி கண்காணிப்பு
கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தீவிர சிகிச்சை வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா பார்வையிட்டார்.
முல்லைத்தீவில் உள்ள பொதுவிடங்கள் பல இராணுவத்தினரால் தொற்று நீக்கம்
கொரோனா வைரஸ் பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அதனை குறைக்கும் வகையில் முல்லைத்தீவு உடையார்கட்டு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் உள்ள பொது இடங்களில் படையினரால் தொற்று நீக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் 4 மெட்ரிக் டொன் உலர் மஞ்சள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையாகத்தின் கடற்படை வீரர்களினால் கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சோதனை நடவடிக்கைகளின் போது சுமார் 4,150 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது. சட்டவிரோதமாக மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட 16 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.
தர இறக்கம் செய்யப்பட்ட கடற்படையின் இரண்டு கப்பல்களும் கடலுக்கடியில் மூழ்கடிப்பு
தர இறக்கம் செய்யப்பட்ட இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'வீரயா' மற்றும் 'ஜகத்தா' ஆகிய இரு கப்பல்கள் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனினங்கள் இனப்பெருக்கம் செய்யும் தளமாக பயன்படுத்த வகையில் திருகோணமலை கடலுக்கு அடியில் மூழ்கடிப்புச் செய்யப்பட்டது.
மினுவாங்கொடை கொத்தணியில் வைரஸ் தொட்டியிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 137 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 633 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் மொத்த எண்ணிக்கை 10,424 ஆக உயர்வடைந்துள்ளது சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.