செய்திகள்
பொதுமக்கள் பீதியடைவதற்கும் பொருட்களை சேமித்து வைப்பதற்குமான தேவை கிடையாது – அரசாங்கம் தெரிவிப்பு
கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்களை கண்டறிய வீடு வீடாக தனிமைப்படுத்தப்படும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக சில வதந்திகள் ...
கொவிட்-19 வைரஸை எதிர்கொள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சுகள் தயார்நிலையில்
பாதுகாப்பு அமைச்சு சுகாதார அமைச்சுடன் இணைந்து கொவிட்-19 என பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களையும் மற்றும் நாட்டின் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களையும் கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
போர் வீரர்களுக்கான முதலாவது நடமாடும் சேவை பாதுகாப்பு அமைச்சினால் களுத்துறையில் ஆரம்பித்து வைப்பு
போர் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலன்களை பேண அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும், இதற்காக புதிய அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக தற்போதுள்ள சட்டமூலங்களை அரசு மீளாய்வு செய்யும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
செயற்கைக்கோள் தகவல்கள் பிரயோகம் மூலம் இலங்கை கடற்படையினரால் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு ஆகியன இணைந்து மூன்று வெளிநாட்டு மீன்பிடி இழுவைப் படகுகளில் கடத்திச் செல்லப்பட்ட 400 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 100 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். 25 நாட்களாக இடம்பெற்ற ஒன்றிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போதே மேற்படி போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. நேற்றையதினம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களே இதுவரை கடற் பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் அதிகூடிய அளவாகும்.
தீவிரமயமாக்கல், மதவாத தீவிரப்போக்கு மற்றும் ஏனைய எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது - பாதுகாப்பு செயலாளர்
தீவிரமயமாக்கல், பயங்கரவாதம் மீள் எழுச்சி, பிரிவினைவாதம், மத தீவிரவாதம், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உள்ளக வேலைநிறுத்தங்கள் என்பன பிரதான சவால்களாக காணப்படுவதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தனது முழுக்கவனத்தையும் செலுத்திவருவதாகவும் தெரிவித்தார்.
இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸார் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்
கேரள கஞ்சா உட்பட சட்டவிரோதமான போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவருவதைத் தடுக்கும் வகையில் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளுமாரும், அதனை ஒழிப்பதற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாரும் இராணுவம் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
உண்மை நிலவரங்களை ஐ. நா. மனித உரிமைகள் பேரவை அங்கீகரிக்கும் என இலங்கை எதிர்பார்க்கிறது – அமைச்சர் குணவர்தன
இலங்கை, ஐ. நா. மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்ந்து செயற்படுதல் என்ற அதன் தொடர்ச்சியான கொள்கையுடன், உயர் ஆணையாளரின் தற்போதைய அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், கள யதார்த்தங்களை இப் பேரவை அங்கீகரிக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்றை நடத்த விரும்புவதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இன்றைய அமர்வின் போது அரசாங்கம் தெரிவித்துள்ளது.
'விருசர' வரப்பிரசாத அட்டைகள் மூலம் 200,000ற்கு மேற்பட பாதுகாப்பு படை வீரர்கள் பயன்
தாய்நாட்டிற்காக உயிர்நீர்த்த படைவீரர்களின் குடும்பங்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்கள் உட்பட 200,000ற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ‘விருசர’ வரப்பிரசாத அட்டைகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
மனித உரிமைகள் மற்றும் நம்பகத்தன்மையை இலக்காக கொண்டு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளது. - அமைச்சர் தினேஷ் குணவர்தன
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 40/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்து விலகிக்கொள்வதாக இலங்கை அரசு அறிவித்திருந்து. எனினும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்தும், நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி இலங்கை மக்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைவதற்கும் உறுதியுடன் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
'விருசுமிதுரு' வீடமைப்புத் திட்டத்தை துரிதப்படுத்தும் பாதுகாப்பு அமைச்சு
தாய் நாட்டிற்காக உயிர்நீர்த்த மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களது குடும்பங்களின் வீட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட "விருசுமிதுரு" வீடமைப்புத் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சு துரிதப்படுத்தியுள்ளது.
புலிகளின் பயங்கரவாதத்தை இராணுவம் தோற்கடித்த போதிலும், சில தமிழ் அரசியல்வாதிகள் அதன் கொள்கைகளை இன்னும் பரப்புகின்றனர் - பாதுகாப்பு செயலாளர்
இலங்கை இராணுவம் 10 வருடங்களுக்கு முன்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை இராணுவ ரீதியில் முற்றாக தோற்கடித்திருந்த போதிலும், சில தமிழ் அரசியல்வாதிகள் அதன் பிரிவினைவாத கொள்ககையை தமிழ் மக்களிளிடையே பரப்புவதற்கு முயற்சிப்பதாகவும் எனவே அதனை முறியடிக்கும் சவால்கள் தற்ப்பொழுதும் காணப்பட்டுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
40/1 தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரணையை இலங்கை அரசாங்கம் திரும்பப் பெறுவதற்கான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பேரவையின் தலைவருக்கு விளக்கமளிப்பு
40/1 தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரணையை இலங்கை அரசாங்கம் திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவரான தூதுவர் எலிசபெத் டிச்சி -பிஸ்ல்பெர்கருக்கு விளக்கினார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத பட்டியலில் தொடரும் - மலேசிய உள்துறை அமைச்சர்
'செயல்படாத பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலை புலிகள் (LTTE) அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலில் தொடர்ந்து இருக்கும் ' என மலேசிய உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய கடற்படைக் கப்பலான ‘தகனமி’ நாட்டில் இருந்து புறப்படுகிறது
இம்மாதம் 21 ஆம் திகதி நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்த ஜப்பானிய கடற்படைக் கப்பலான “தகனமி” இன்று (பெப்ரவரி, 23) இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சிஐடியினர் முன்னெடுக்கும் விசாரணைகளை துரிதப்படுத்த விஷேட செயலணி
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரனைகளை துரிதப்படுத்தி அதன் முன்னேற்றங்களை கண்காணிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சு விஷேட செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளது.
காணாமல் போனோரின் குடும்பங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுக்கின்றது
காணாமல் போனோரின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரால் தகவல் திரட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளதை பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுக்கின்றது.
துறைசார் மற்றும் ஒழுக்கமுள்ள பொலிஸாரே நாட்டுக்கு தேவை- பாதுகாப்பு செயலாளர்
நாட்டில் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக்கூடிய துறைசார் மற்றும் ஒழுக்கமுள்ள பொலிஸாரின் அவசியத்தை பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு)கமல் குணரத்ன வலியுறுத்தினார்.
சட்டரீதியாக ஆயுதங்களை வைத்திருப்பதற்கான அனுமதிப் பத்திரம் பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளத்தில்
அண்மையில் வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தில், சட்டரீதியிலான அனுமதிப்பத்திரம் இல்லாத அல்லது அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படாத சுமார் 200ஆயுதங்கள், ஒன்பது மாகாணங்களிளும் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அங்கவீனமுற்ற படையினருக்கான ஓய்வூதிய பிரச்சினைகளை தீர்க்க பாதுகாப்பு அமைச்சு புதிய அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு
பொலிஸார் மற்றும் அங்கவீனமுற்ற முப்படையினருக்கான ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய அமைச்சரவை பத்திரமொன்றை பாதுகாப்பு அமைச்சு விரைவில் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பாக தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினர்
சட்டவிரோத ஆயுதங்களை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த ஒரு வார பொது மன்னிப்பு காலம் முடிவடைந்ததையடுத்து, பொலிஸ் மற்றும் ஏனைய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து சட்டவிரோத ஆயுதங்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தினை முறியடித்த இலங்கையின் அனுபவங்களை பகிர்ந்த கொள்ள துருக்கி எதிர்பார்ப்பு
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடிய இலங்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், வன்முறை அடிப்படையிலான தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்படும் வகையில் புலனாய்வு தகவல் பகிர்வை மேம்படுத்துவதற்கும் துருக்கி எதிர்பார்க்கிறது.
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆப்காணிஸ்தான் ஒத்துழைப்பு
தெற்காசிய பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்கும் பொருட்டு இலங்கைக்கு முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தனது ஒத்துழைப்பினை வழங்கும் என இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் எம். அஷார்ப் ஹைதரி உறுதியளித்தார்.
Tamil
இராணுவ தளபதியின் அமெரிக்கா பயணத் தடைக்கு இலங்கை கடுமையாக எதிர்ப்பு
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு இடமளிக்க போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் உறுதியளிப்பு
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையின் கீழ் எதிர்காலத்தில் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இடமளிக்க போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன உறுதியளித்துள்ளார்.