செய்திகள்
சமூக வலைத்தளத்தில் வதந்திகளை பரப்பிய நபர்கள் பொலிஸாரினால் கைது
கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான காணொளிகளை சமூக ஊடகங்கள் ஊடாக பதிவேற்றிக் கொண்டிருந்த கெலனியமுல்லவில் வசிக்கும் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிக எண்ணிக்கையிலான ஊரடங்கு சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிப்பு
இன்று (08) அதிகாலை 6.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தினுள் அதிக எண்ணிக்கையிலான ஊரடங்கு சட்ட மீறல்கள் மூலம் சுமார் 1,800 கைதுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைவிடப்பட்ட வீஒஏ கட்டிடத்தை புதியதொரு தனிமைப்படுத்தும் வைத்தியசாலையாக இராணுவத்தினர் மாற்றியுள்ளனர்
40 கட்டில்களுடனான படுக்கை வசதிகளைக்கொண்டதும், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பபு கருதியும் தன்னியக்க பைலட் வாகனங்கள் மற்றும் ரோபோ தொழிநுட்பம் கொண்ட தனிமைப்படுத்தும் வைத்தியசாலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
Tamil
Tamil
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாக சட்ட வல்லுநர் ராஜா குணரத்ன நியமனம்
மனிதாபிமான சட்ட வல்லுநர் ராஜா குணரத்ன, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலையங்களில் தேவையற்ற வரிசைகளை குறைப்பதற்காக ஊரடங்கு விதத்தில் புதிய சுற்றறிக்கை வெளியீடு
ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான புதிய முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப பொலிஸ் தலைமை அலுவலகம், மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம், பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஆகியவற்றின் ஊடாக 4 முறைகளைக் கொண்ட புதிய நடைமுறையின் கீழ் ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடற்படையின் மனிதாபிமான செயற்பாடுகள் விரிவாக்கம்; வெளிநாட்டு கப்பலில் பணிபுரியும் இலங்கை சிப்பந்தியை நாட்டுக்குள் தரையிறக்க ஏற்பாடு
எம்எஸ்சி 'மெக்னிபிக்கா' எனும் வெளிநாட்டு கப்பலில் பணிபுரிந்த இலங்கையரான அனுர பண்டார ஹேரத், கப்பலில் இருந்து தரை இறங்குவதற்கான ஏற்பாடுகள் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது. கப்பலில் இருந்த அவர், தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்கு இணங்க இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டார்.
Tamil
Tamil
கொரோனா வைரஸை எதிர்த்துப் போரிடும் மருந்துகளை தயாரிக்குமாறு ஆயுர்வேத மருத்துவர்களிடம் அரசு கோரிக்கை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தில் இலங்கையின் 60ற்கு மேற்பட்ட முன்னணி சுதேச மருத்துவ துறையினருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.
இராணுவத்தின் தலைமையிலான தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலில் 3,372 க்கும் மேற்பட்டோர்
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் உட்பட மொத்தம் 3,169 பேர், முப்படையினரின் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ராஜகிரியாவில் உள்ள கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழுமையாக முடக்கும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை - பாதுகாப்பு செயலாளர்
நாட்டில் கொரோனா தாக்கம் தொடர்பான தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு, நாட்டினை முழுமையாக முடக்கும் (லொக்டவுன்) தீர்மானம் எதனையும் அரசாங்கம் எடுக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
வரையறுக்கப்பட்ட அலையன்ஸ் காப்புறுதி லங்கா நிறுவனத்தினால் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை பரிசோதிக்கும் இயந்திரம் அன்பளிப்பு
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை பரிசோதிக்கும் இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்காக வரையறுக்கப்பட்ட அலையன்ஸ் காப்புறுதி லங்கா நிறுவனத்தினால் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.
Tamil
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் தேசிய பாதுகாப்பை பேணுவதில் இராணுவம் அதிக கவனத்துடனே உள்ளது - பாதுகாப்பு செயலாளர்
- எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள, புலனாய்வு அமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு
முழு உலகமும் கொரோனா வைரஸ் அச்சத்தில் மூழ்கியுள்ள நிலையில், வைரஸைக் கட்டுப்படுத்த சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வரும் இலங்கை...
Tamil
12,500 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினர் நாட்டின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 463 கடல் மைல் (835 கி.மீ) தொலைவில் பெருமளவு போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு கப்பல் ஒன்றினை கைப்பற்றியுள்ளனர்.
அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே ஊரடங்கு சட்டத்தின் போது அனுமதி வழங்கப்படும் - பொலிஸ்
அத்தியாவசிய சேவைகளின் கீழ் ஊடகங்களுக்கு அனுமதி பெறமுடியும்.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் பிரதேச
வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்...
வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் பொது மக்களுக்கு கடற்படையினரால் குடிநீர் மற்றும் உலர் உணவுப்பொருட்கள் விநியோகிப்பு
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலன்புரி நடவடிக்கைகளில் ஒன்றாக வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் ஏழைக் குடும்பங்கள் மற்றும் மதஸ்தலங்கள் ஆகியவற்றுக்கு குடிநீர் மற்றும் உலர் உணவுப்பொருட்கள் என்பன விநியோகித்து வைக்கப்பட்டன. குறித்த இந்த நடவைக்கை வடமத்திய கடற்படை கட்டளையகத்தினால் இம்மாதம் 26ம் திகதி முதல் 27ம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டது.
நன்கொடையாளர்களினால் உலர் உணவுப் பொதிகள் விநியோகிப்பு
கொழும்பு மாவட்டத்தில் (அன்றாடம் தொழில் புரிகின்ற) குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் 85 உலர் உணவு பொதிகளை நன்கொடையாளர்கள் வழங்கி வைத்துள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வரியமக்களுக்கு இவ் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் உளர் உணவு பொதிகள் விநியோகிப்பு
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தலைவி, திருமதி சித்ராணி குணரத்ன அமைச்சில் பணிபுரியும் சிற்றூழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை விநியோகித்துள்ளார்.
ஊரடங்குச் சட்டத்தினை மதித்து நடக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் வலியுறுத்து
பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் யாழ் குடா நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் அவற்றிலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காகவும் அரசாங்கத்தினால் ஊரடங்கு சட்டத்தினை மீண்டும் நாடுமுழுவதும் அமுல்படுத்த நேரிட்டதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்
கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்கள் மற்றும் வட மாகாண மாவட்டங்கள் அடங்களாக நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான பயணத்தை தடைசெய்யும் வகையில் விதிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம்...
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பது அவசியம் - பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு
கொரோனா வைரஸ் அல்லது கோவிட் - 19 பரவலை தடுக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சமூக ஊடகங்கள் மூலமாக வதந்திகளை பரப்பி வரும் நபர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்தயுடன் செயற்படுமாறு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அனைத்து இலங்கையர்களையும் கோரியுள்ளார். வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நபர்கள் உள்ளடங்களாக அனைவரும் வீட்டுகளில் தரித்திருப்பதன் மூலமும், சுகாதார மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலமும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.