செய்திகள்
Tamil
72 வது ஆண்டு நிறைவு விழாவின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்கான அதிமேதகு ஜனதிபதியின் வருகையோடு “கஜபா இல்லம்” புதிய வரலாற்றை பதிவு செய்கிறது
இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவு தின நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவிருந்த சில காலங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் அதிகாரியாக சேவையாற்றிய அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வரவேற்பளிப்பதற்காக (ஒக்டோபர் 10) சாலியபுரவிலுள்ள “கஜபா இல்லம்” விழாக்கோலம் பூண்டிருந்ததோடு இராணுவ கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கிராமப்புற மக்களின் நலனுக்காக கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட 874வது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கருவலகஸ்வெவ, ரஜவிகம பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்றைய தினம் (ஒக்டோபர் 09) பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
சந்தஹிருசேய தூபி நிர்மாணப்பணிகள் ஜனாதிபதியினால் மீளாய்வு
அனுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சந்தஹிருசேய தூபியின் நிர்மாணப்பணிகள் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் என்பனவற்றை மீளாய்வு செய்யும் நோக்கில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றைய தினம் (ஒக்டோபர், 09) நகருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விமானப்படையினரால் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு
இலங்கை விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட மேலும் இரண்டு ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் அரச வைத்தியசாலைளில் பயன்படுத்துவதற்காக சுகாதார பிரிவினரிடம் நேற்று (ஒக்டோபர், 06) கையளிக்கப்பட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்
2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களைபுதுப்பிப்பதற்கான திகதிகளை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அரச புலனாய்வு சேவை தனது 80 வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது
அரச புலனாய்வு சேவை தனது 80வது ஆண்டு நிறைவு விழாவை ஒக்டோபர் மாதம் 01ம் திகதியன்று மிக எளிமையான முறையில் கொண்டாடியது.
கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் அதன் கல்விதுறைகளை விஸ்தரிக்கிறது
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம், பாகிஸ்தானின் காம்சாட்ஸ் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஆவணத்தில் அண்மையில் கையெழுத்திட்டது.
தெற்கு சூடானில் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டு நாடு திரும்பவுள்ள படையினருக்கு பதக்கங்கள் அணிவிப்பு
தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டு நாடு திரும்பவுள்ள இலங்கை இராணுவ வீரர்களுக்கு அண்மையில் தெற்கு சூடானை தளமாகக் கொண்ட வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின்போது பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.
Tamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி
தற்காலத்தில் உலகம் முகங்கொடுத்திருக்கும் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், அனைத்துச் சிறுவர் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய சிறுவர் உலகத்துக்கான வரையறைகள் அதிகரித்துள்ளன. பாடசாலை வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் என்பன, இன்னமும் எமது பிள்ளைகளுக்குத் தொலைதூரமாகியுள்ளன.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கான செயலமர்வில் பாதுகாப்பு செயலாளரினால் விஷேட சொற்பொழிவு
சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பாதாள உலக கோஸ்டிகளும் தங்களது வலையமைப்பின் செயற்பாடுகளை சிறைகளுக்குள் இருந்தவாறு தொடர்ந்து முன்னெடுக்க அனுமதித்தல் அல்லது அவர்களின் அனைத்து சட்டவிரோத செயல்களையும் தடுத்து நிறுத்தல் என்பது சிறைச்சாலை அதிகாரிகளின் நடத்தையில் தங்கியுள்ளது.
ரஷ்யாவில் நடைபெற்ற 58 வது உலக இராணுவ குத்துச்சண்டை போட்டியில் இலங்கை இரண்டு வெண்கலப் பதக்கங்கள்
ரஷ்யாவில் நடைபெற்ற 58 வது உலக இராணுவ குத்துச்சண்டை போட்டியில் இலங்கை இரண்டு வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இணைந்து கொண்டது. இலங்கை இராணுவத்தின் லான்ஸ் காேர்ப்ரல் சஜீவா நுவான் மற்றும் இலங்கை விமானப்படையின் லீடிங் எயார் கிராப்ட் வுமன் கயானி களுஆராச்சி ஆகிய இருவரும் மாெஸ்கோவில் உள்ள தேசபக்தி கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் இம்மாதம் 19ம் திகதி முதல் 26ம் திகதி வரை இடம்பெற்ற சர்வதேச போட்டியில் தங்களின் எடை பிரிவில் வெண்கலப் பதக்கத்தினை சுவீகரித்தனர்.
சந்தஹிருசேய தூபி இவ்வாண்டு நவம்பரில் பக்தர்களின் வழிபாட்டுக்கு வழங்கப்படும் - பாதுகாப்பு செயலாளர்
சந்தஹிருசேய தூபியின் நிர்மாணப்பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, அதுஇந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பொதுமக்களின் வழிபாடுகளுக்காக வழங்கப்படுவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது
இலங்கைக்கான அவுஸ்திரேலிய பதில் உயர்ஸ்தானிகர் அமன்டா ஜுவல் தலைமையிலான அவுஸ்திரேலிய தூதுக்குழு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) இன்றைய தினம் (செப்டம்பர், 23) சந்தித்தது.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் பாராட்டு
சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்புக்களை முடக்குவதற்காக இலங்கை அரசசு பாதுகாப்பு அமைச்சினூடாக தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் பிரியாவிடை சந்திப்பு
தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்த இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மது சாத் கட்டக், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுடன் (ஓய்வு) தனது பிரியாவிடை சந்திப்பை மேற்கொண்டார்.
மற்றொருதொகுதிஹெராேயின் போதைப்பொருள் ஏற்றப்பட்ட கப்பல் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
170 கிலோ 866 கிராம் போதைப்பொருளை கொண்டு சென்ற வெளிநாட்டு கப்பல் ஒன்றினை இலங்கை கடற்படை கைப்பற்றியதுடன் அதனை இன்று காலை (செப்டம்பர், 18) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்தது.
இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எகிப்திய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
எகிப்து அரேபிய குடியரசின் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான தூதுவர் அதிமேதகு ஹுசைன் எல் சஹார்தி, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (செப்டம்பர், 17) இடம்பெற்றது.