செய்திகள்
சந்தஹிருசேய அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.
சந்தஹிருசேய தூபியை அண்மித்தாக நிர்மாணிக்கப்படவுள்ள அருங்காட்சியகத்திற்கான அடிக்கல்லினை இன்றைய தினம் (ஜூலை, 10) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நாட்டிவைத்தார்.
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மேற்கு கரையோரப் பிரதேசங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணபுரத்தில்தேவையுடைய குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு கையளிப்பு
கிளிநொச்சி பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களின் நிதி, மனிதவளம் மற்றும் தொழிநுட்ப திறன் மூலம் நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய வீடு கிருஷ்ணபுரம் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பமான திருமதி. சசிதரன் சுதர்ஷினியின் குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
யாழில் டெங்கு பரவலை தடுக்க இராணுவத்தினரினால் மதஸ்தானங்கள் சுத்தம் செய்யப்பட்டன
யாழ் தீபகற்பத்தில் டெங்கு நுளம்பு பரவும் என இனங்காணப்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைய யாழில் மத ஸ்தானங்களை சுத்தப்படுத்தும் சிரமதான நிகழ்வு படையினர் மேற்கொண்டனர்'
Tamil
பெட்டி வடிவத்திற்குள் கப்பல் ஓட்டும் கடல் சார் கடற்படையின் பயிற்சிநெறி
பெட்டி வடிவத்திற்குள் கப்பல் ஓட்டுதல் எனும் கடற்படையின் பயிற்சிநெறி, சிறப்பு படகுப் பிரிவு தலைமையத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன முன்னிலையில் அங்குராப்பனம் செய்துவைக்கப்பட்டது.
சேதனப் பசளை உற்பத்தியை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம்
சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தின் போது மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே (ஓய்வு), அதிமேதகு ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக சேதனப் பசளை உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
Tamil
Tamil
Tamil
Tamil
இராணுவத்தினரால் சமூக தடுப்பூசி நிலையங்கள் அமைப்பு
ஜனாதிபதியின் பணிப்புரையை அடுத்து இன்று (ஜூலை 5) காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சினோஃபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெறுவதற்காக மேற்கு மாகாணத்தில் புதிய சமூக தடுப்பூசி நிலையங்களையும், மாவட்ட அடிப்படையிலான நிலையங்களையும் இராணுவத்தினர் அமைத்துள்ளனர்.
பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அதிமேதகு தாரிக் முஹம்மட் ஆரிபுல் இஸ்லாம், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) இன்று (ஜூலை, 05) சந்தித்தார்.
'நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி- 2021' கூட்டுப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு
இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டு கடற்படையினர் பங்கு கொண்ட "நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி- 2021" கூட்டுப் பயிற்சி நடைவடிக்கை நேற்றையதினம் (ஜூன் 30) வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
கடற்படை கூட்டுப்பயிற்சியின் கடல் சார் பயிற்சிகள் திருகோணமலையில் ஆரம்பம்
இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கு கொள்ளும் நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டுப் பயிற்சி” நடைவடிக்கையின் இரண்டாவது கட்டம் திருகோணமலை கடற்பரப்பில் ஜூன் 26ம் திகதி ஆரம்பமானதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரால் 100 நோயாளிகளை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையம் பெலியத்தவில் ஸ்தாபிப்பு
பெலியத்த ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட் - 19 நோயாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது.
போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை’ முன்னிட்டு தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை ஏற்பாடு செய்த விசேட நிகழ்வு
'போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை’ முன்னிட்டு தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால்.
நல்லூரில் 80 கிலோ கஞ்சா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது
நல்லூர் சீதா குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையின்போது 80 கிலோ கிராம் அதற்கு மேற்பட்ட கேரள கஞ்சா இராணுவத்தினரால் நேற்றைய தினம் (ஜூன்,25) கைப்பற்றப்பட்டது.
Tamil
ஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை
எமது நாட்டுக்கு மட்டுமன்றி, அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடையாத அனைத்து நாடுகளுக்குமே, இன்று ஒரு பாரிய பிரச்சினையாக கொவிட் 19 தொற்றுப் பரவல் மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள சுமார் 178 மில்லியன் பேர், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3.8 மில்லியன் பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
Tamil
பலதரப்பு கடற்படை பயிற்சி நடவடிக்கை திருகோணமலையில் ஆரம்பம்
இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கு கொள்ளும் கூட்டு கடற்பயிற்சி நடைவடிக்கை திருகோணமலை கடற்படை தளத்தில் இன்று (24) ஆரம்பமானது.
Tamil
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) முகமம்து சாத் கட்டாக் இன்று (ஜூன் 22) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) சந்தித்தார்.
படையினரால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூட வசதிகள் விரிவாக்கம்
கொவிட் – 19 தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள கொவிட் - 19 தொற்றை கண்டறிவதற்கான ஆய்வுக்கூடத்தை புதுபிக்கும்மற்றும் விரிவுபடுத்தும் பணிகள் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.